கொடி சம்பங்கி

சம்பங்கி கொடியாக படரும், சம்பங்கியின் பூ நல்ல மணமுள்ளதாக இருக்கும். இலையை விட பூ தான் மருத்துவகுணம் கொண்டது.

வீக்கங்கள் வாட : சம்பங்கி இலையை வேப்ப எண்ணெயில் வதக்கி வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் வாடிவிடும்.

தலைவலி குணமாக : சம்பங்கி பூவை சூடுவதாலும் அந்த பூவை இடித்து நெற்றியில் பற்று போடுவதாலும் தலைவலி குணமாகும்.

மலச்சிக்கல் நீங்க : சம்பங்கிப் பூவை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி ஆற வைத்து இறக்கி வடிகட்டி தேவையான நாட்டு சர்க்கரை சேர்த்து இரவு படுக்கும் முன் குடித்து வந்தால் காலையில் மலம் சரளமாக இறங்கும்.

நல்ல பசி உண்டாக : சம்பங்கிப் பூவை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு போட்டு அதில் கொதிக்கும் நீரை விட்டு மூடி வைத்திருந்து ஆறியதும் எடுத்து தேவையான நாட்டுசர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் நல்ல பசி உண்டாகும்.

கண் வலி குணமாக : சம்பங்கிப் பூக்களை கொண்டு வந்து அதை சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்து இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றி கனமாக பற்று போட்டு சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இதை மூன்று நாள் செய்தாலே போதும் கண் வலி குணமாகும்.