நவமணிகள் மருத்துவம்

தொன்று தொட்டு நம் நாட்டில் புழங்கி வரும் நவமணிகள் வெறும் ஆடம்பரத்திற்கு மட்டும் உரியவை அல்ல. ஒவ்வொரு மணிகளுக்கும் உளவியல் பண்புகளும், மருத்துவ குணங்களையும் உண்டு என்று நாம் பழைய நூல்களும் சித்தமருத்துவமும் கூறுகிறது. மனரீதியான அமைதி, உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த நவமணிகளின் பண்புகளையும், மருத்துவகுணங்களையும் பார்க்கலாம்.

கோமேதகம் / Garnet / Hessonite

இரத்த சோகை நீக்கும், பித்தம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்தும்.

நீலம் / Blue Sapphire

இதய நோய்களுக்கு நல்லது; கண்பார்வையை வலுப்படுத்தும். விஷக்கடிகளின் நஞ்சை அகற்றும்; நெருக்கடியில் தளராத மன உறுதியும் மன அமைதியும் கிடைக்க உதவும்.

பவளம் / Coral

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இதய ரத்த உறைவைத் தடுக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்; இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; இருமல், ஆஸ்த்துமா, மூலம், பேதியைக் குணப்படுத்தும்.

புஷ்பராகம் / Yellow Sapphire / Topaz

புட்பராகம் மணிகள் வயிற்று நோய்கள், தொழுநோய் இவற்றைப் போக்கும்; ஆண்மையைப் பெருக்கும்; உடலில் அணிந்திருக்கும் போது நோய் வரப் போவதை அறிவிக்கும் வகையில் தன் நிறத்தை மாற்றிக் காட்டும்.

மரகதம் / Emerald

நரம்பு சம்பந்தமான நோய்கள்; கண் நோய்கள் நீங்கும்; நஞ்சுகளைச் சீரழிக்கும்; பயம் போக்கும்.

மாணிக்கம் / Ruby

வெட்டுக் காயத்தில் வைத்தால் இரத்தம் வடிவது நிற்கும். நச்சுப் பிராணிகளைக் கொல்லும்.

முத்து / Pearl

உடலுக்குக் குளிர்ச்சி தரும்; நீண்ட வாழ்நாள் பெற உதவும்; பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும்; கணவன் மனைவி தாம்பத்திய ஒற்றுமையை வளர்க்கும்.

வைடூரியம் / Cat’s Eye

கடி வாயில் வைத்தால் நஞ்சை முறிக்கும்; கண் பார்வையை வலுப்படுத்ததும்; காய்ச்சலைக் குணப்படுத்தும். நீண்ட வாழ்நாளும் நலமும் பெற உதவும்.

வைரம் / Diamond

கெட்ட கனவுகள் வராமல் தடை செய்யும். பைத்தியம், தொழுநோய் இவற்றை குணப்படுத்தும்.

மேற்கண்ட நவமணிகள் முற்றிலும் போலியின்றி உடலில் அணியும் போது இப்பலன்கள் கிடைக்கக்கூடும். பரிசோதனை செய்து பலன் பெற்று உங்கள் கருத்துக்களை பதிவிடலாமே..

(1 vote)