கம்பு இட்லி

உடலுக்கு தெம்பையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அளிக்கும் அற்புத உணவு இந்த கம்பு இட்லி. எளிதாக தயாரிக்கக் கூடியது. குழந்தைகள், பெரியார்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரும்பி உண்ணக்கூடியது. மேலும் நாட்டுக் கம்பைப் பற்றியும் அதன் பயன்கள், நன்மைகளை தெரிந்துக் கொள்ள இங்கு இணையவும். இந்த பகுதியில் நாட்டுக் கம்பில் தயாரிக்கக் கூடிய உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • 3 கப் நாட்டு கம்பு / கம்பு / கம்பரிசி
  • ஒரு கப் உளுந்து
  • ஒரு ஸ்பூன் வெந்தயம்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • உமி தொலி நீக்கிய முழு கம்பு என்றால் அதனால் 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். கம்பு அரிசி என்றால் அதனை மூன்று மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
  • வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • உளுந்தை முக்கால் மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

  • முதலில் வெந்தயத்தை கிரைண்டரில் ஒரு ஐந்து நிமிடம் அரைத்துவிட்டு அரிசியையும் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். மிக்சியிலும் அரைக்கலாம்.
  • பின் உளுந்தை நன்கு பொங்க பொங்க கிரைண்டரில் அரைத்து எடுக்க வேண்டும்.
  • இவை இரண்டையும் இட்லி மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

  • கரைத்தவற்றை 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும். சீதோஷ்ண நிலையைப் பொருத்து மாவு புளிக்கும் நேரம் மாறுபடலாம்.
  • 8 மணி நேரத்தில் மாவு நன்கு பொங்கி புளித்து தயாராக இருக்கும்.
  • பின் இட்லி தட்டில் நன்கு புளித்த இந்த கம்பு மாவை ஊற்றி மாவை 7 -10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

  • வேக வைத்து எடுக்க கம்பு இட்லி பூப்போல வெந்து தயாராக இருக்கும்.
  • அவ்வளவுதான் சூடான சுவையான சத்தான கம்பு இட்லி தயார்.
  • சாம்பார், சட்னி, துவையலுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
  • குறிப்பு : துணியில் இந்த மாவை ஊற்றி வேகவிட கூடுதல் மிருதுவும், சுவையும் சேரும். கருப்பு உளுந்து சேர்க்க சுவையும் ஆரோக்கியமும் பெருகும். மூட்டுவலிக்கு சிறந்தது.

கம்பு இட்லி

உடலுக்கு தெம்பையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அளிக்கும் அற்புத உணவு இந்த கம்பு இட்லி. எளிதாக தயாரிக்கக் கூடியது. குழந்தைகள், பெரியார்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரும்பி உண்ணக்கூடியது.
ஆயத்த நேரம் : – 8 hours
சமைக்கும் நேரம் : – 10 minutes

தேவையான பொருட்கள்

  • 3 கப் நாட்டு கம்பு / கம்பு / கம்பரிசி
  • ஒரு கப் உளுந்து
  • ஒரு ஸ்பூன் வெந்தயம்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • உமி தொலி நீக்கிய முழு கம்பு என்றால் அதனால் 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். கம்பு அரிசி என்றால் அதனை மூன்று மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
  • வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • உளுந்தை முக்கால் மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • முதலில் வெந்தயத்தை கிரைண்டரில் ஒரு ஐந்து நிமிடம் அரைத்துவிட்டு அரிசியையும் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். மிக்சியிலும் அரைக்கலாம்.
  • பின் உளுந்தை நன்கு பொங்க பொங்க கிரைண்டரில் அரைத்து எடுக்க வேண்டும்.
  • இவை இரண்டையும் இட்லி மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • கரைத்தவற்றை 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும். சீதோஷ்ண நிலையைப் பொருத்து மாவு புளிக்கும் நேரம் மாறுபடலாம்.
  • 8 மணி நேரத்தில் மாவு நன்கு பொங்கி புளித்து தயாராக இருக்கும்.
  • பின் இட்லி தட்டில் நன்கு புளித்த இந்த கம்பு மாவை ஊற்றி மாவை 7 -10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • வேக வைத்து எடுக்க கம்பு இட்லி பூப்போல வெந்து தயாராக இருக்கும்.
  • அவ்வளவுதான் சூடான சுவையான சத்தான கம்பு இட்லி தயார்.
  • குறிப்பு : துணியில் இந்த மாவை ஊற்றி வேகவிட கூடுதல் மிருதுவும், சுவையும் சேரும்.