பூனை மீசை – நம் மூலிகை அறிவோம்

Orthosiphon stamineus, Misai Kucing; cat’s whiskers; பூனை மீசை

இந்த மூலிகை சிறுநீரக கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், பித்தப்பை கல், சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, யூரியா, அதிக உடல் எடை, கிரியேட்டின், போன்ற நோய்களை குணப்படுத்தி இரத்தத்தை தூய்மை செய்கிறது.

பூனை மீசை கசாயம்

பூனை மீசையை சமூலமாக ஒரு 20 கிராம் கொண்டு வந்து 400 மில்லி நீரிலிட்டு சுண்டக்காய்ச்சி 50 மில்லியாக ஆக்கி காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதேபோல் மாலையும் தயார் செய்து தொடர்ந்து பருகிவர மேற்கண்ட நோய்கள் படிப்படியாக குணமாகும்.

பூனை மீசை தேநீர்

வாதம், புற்றுநோய்க்கும் சிறந்த பலனை அளிக்கும். பூனை மீசை இலைகள் நினைவாற்றலை அதிகரிக்கவும் பயன்படும் மூலிகை. இந்த இலைகளைக் கொண்டு தேநீர் செய்து பருக உடலில் ஏற்படும் வீக்கம் வலிகள் நீங்கும். இந்த தேநீரை பல நாடுகளில் ஜாவா டீ என்று அழைப்பதுண்டு.

(6 votes)