Welcome to HealthnOrganicsTamil !!!

வீட்டிலேயே தண்ணீரை சுத்திகரிக்கலாம்…

இயற்கை முறையில் நம்மருகில் கிடக்கும் நிலத்தடி நீர், ஆற்று நீர் குளத்து நீரை எவ்வாறு வீட்டிலேயே சுத்திகரித்து செலவில்லாமல் தாகம் தணிப்பது…

யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மண் பானை நீர்

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து தீமைசெய்யும் கிருமிகளையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும்.

Natural Water, How to clean water, Drinking water purification, natural way to purify water, water filter natural way

மண்பானை தண்ணீரில் வெட்டிவேரை சேர்க்கும் போது தீமை செய்யும் கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும்.

இயற்கை பில்டர் வாட்டர்

தண்ணீரை கொதிக்க வைப்பது மீண்டும் தண்ணீரில் உள்ள பிராண சக்தியை அழிக்கிறது. அதனால் கொதிக்க வைக்காமல் வெள்ளை நிற பருத்தித் துணியால் வடிகட்டலாம். வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை பில்டர் செய்தால் (வடி கட்டினால்) அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டுசெய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது, அல்லது பழைய காலங்களில் இருந்த சுண்ணாம்பு கல் வடிகட்டியைப் பயன்படுத்தலாம்.

செம்பு குடிநீர்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப்படுகிறது. எனவே செம்பு என்ற உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம்.

Copper jug Water, Natural Water, How to clean water, Drinking water purification, natural way to purify water, water filter natural way

மழை நீர்

மழைநீரை சேகரித்து பாதுகாத்து பயன்படுத்தலாம். தேத்தான் கொட்டை, வெட்டிவேர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

எங்கள் இடத்தில் தண்ணீர் உப்பாகவும் மிக மோசமாகவும் இருக்கிறது என்று கருதுபவர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மண்பானையில் ஊற்றி வெட்டிவேர் சேர்த்து பருகலாம். தாகமும் தணியும் பிராண சத்தும் கிடைக்கும்.

தூய இயற்கை முறையில் பெற்ற தண்ணீரை தொடர்ந்து குடிப்பதினால் முகம் பொழிவுபெரும், உடலில் கொழுப்புகள் நீங்கி உடலின் எடை குறையும், உடல் புத்துணர்வு பெரும், ஜீரணசக்தி அதிகரிக்கும், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும், இரத்த அழுத்தம் நோய் நீங்கும், சர்க்கரை வியாதி சரியாகும், சிறுநீரக நோய்கள் சீராகும், சிறுநீர், பித்தப்பை கற்கள் காணாமல் போகும், எலும்புகள் வலுபெறும்… மொத்தத்தில் உடலும் மனதும் ஆரோக்கியமாக வளம் வரும்.

அழகிற்காக பலாயிரத்தை செலவு செய்யும் நாம் எளிதாக அழகு பெற ஏற்ற ஒரு உணவு இயற்கை முறையில் கிடைக்கும் தண்ணீர். எந்த செலவும் இல்லாமல் தொடர்ந்து மண்பானை தண்ணீர் குடிக்க முக பளபளப்பு மட்டுமில்லாது உடலும் ஜொலிஜொலிக்கும். சுறுசுறுப்பும் கண்ணில் பிரகாசமும் பார்ப்பவரை கவரும் இளமையும், அழகும் நம்மிடையே தாண்டவம் ஆடும்.

கோடை காலத்திற்கு ஏற்ற குளுமையை மண்பானை தண்ணீரே அளிக்கும்.

ப்ரீட்ஜீல் வைத்து தண்ணீர் குடிக்க நேர்ந்தால் நீங்களே உங்களுக்கு சூனியம் வைப்பதற்கு அது சமம். இந்த தண்ணீரால் உடல் அதிக வெப்பமடைந்து கழிவுகள் தேங்கும். அதிக குளுமையுடன் பிளாஸ்டிக் பாட்டில் சேர்வதனால் ஏற்படும் வேதியல் மாற்றம் விரைவில் புற்று நோயை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

Natural Water, How to clean water, Drinking water purification, natural way to purify water, water filter natural way, fish in water

பிராண சத்தும் தாது உப்பும் சீராக பெற்ற தண்ணீர் எது என்று எளிதாக அறிய தண்ணீரில் மீன்களை விடுங்கள். மீன்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் தென்பட அந்த தண்ணீர் குடிக்க ஏற்ற தண்ணீர்.

ஒவ்வொரு முறையும் தண்ணீரைக் குடிக்கும் போதும் உதடுகள் நனையும் படி வாய்வைத்து பொறுமையாக தேவையானதை பருகவும். இவ்வாறு தண்ணீரை குடிக்கும் போது உடல் உறுப்புகளும் குளிர்ந்து புத்துணர்வடையும்.

மதிப்பீடு செய்யவும்
சிந்தனை துளிகள் :

துப்புக்கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு.

You may also like...

1 Response

  1. Mohan Kumar Srinivasan says:

    The vessel is not like copper but like brass

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!