மொச்சைக் காய்

கார்த்திகை மாதத்திற்கு பின் சாதாரணமாக பச்சை மொச்சை சந்தைகளில் கிடைப்பதுண்டு. அதனை அப்படியே செய்து சமைத்தும் சாப்பிடலாம். அதே போல் நமக்கு பலசரக்கு கடைகளிலும் நமக்கு காய்ந்த மொச்சை எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

மொச்சைக் காயை சாம்பாரில் அல்லது குழம்பில் போட்டு அதனை சாதத்துடன் பயன்படுத்துவதும் நமது பழக்கம். நடைமுறையில் இதனை ‘மொச்சைக் கொட்டை’ என்று கூறுவதும்.

மொச்சை காயை வேக வைத்து சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின் ‘ஈ’ இருக்கிறது. வைட்டமின் ‘ஈ’ குறைவு உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி சாப்பிடுவது சிறந்தது.

மொச்சை காயை பச்சையாக உபயோகிக்கும் போது சமைத்து சாப்பிட்டால் அதன் பலனை முழுமையாகப் பெறலாம். காய்ந்த மொச்சையை ஊற வைத்து அதன் மேல் தோலை நீக்கிவிட்டு, அதனை வெயிலில் காய வைத்த அந்த பருப்பை எண்ணெயில் போட்டு பொரித்து காரம், உப்பு கலந்து சாப்பிடலாம், சுவையாக இருக்கும்.

ஊரல் வியாதி உள்ளவர்கள், தோல் சம்பந்தமான வேறு வியாதி உள்ளவர்கள் மொச்சைக்காயை உணவில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படி பயன்படுத்தினால் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் மேலும் தீவிரமாகும்.