மிளகு சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

பாரம்பரிய அரிசியில் உருண்டை வடிவில் அழகாக இருக்கும் வெள்ளை நிற அரிசி இந்த மிளகு சம்பா அரிசி. மிளகைப்போல் வட்டமாகவும் மிளகின் கழிவு நீக்கம் தன்மையையும் இந்த அரிசி பெற்றதால் இதற்கு மிளகு சம்பா என்ற காரணப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். மிளகு எவ்வாறு தனது காரத்தினால் தீங்கு விளைவிக்காமல் உடலில் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுமோ அதேபோல் இந்த மிளகு சம்பா அரிசி உடல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. உடல் கழிவுகள் வெளியேறுவதால் உடலில் ஏற்பட்டிருக்கும் நோய் தொற்றுகளும், நோய்களும் எளிமையாக வெளியேற உதவுகிறது.

பசியை தூண்டக்கூடிய இந்த பாரம்பரிய அரிசி சீரான ஜீரணத்தையும் அளிக்கிறது. குடல் சார்ந்த நோய்கள், வயிற்றுப் புண், வாய்ப்புண், அஜீரணம், வாய்வு, குடல் சார்ந்த புற்றுநோய், நாவரட்சிம் என பல பல உடல் தொந்தரவுகள் நோய்களுக்கு சிறந்த அரிசி. வாத நோய்க்கு சிறந்த அரிசி.

இந்த மிளகு சம்பா அரிசியை விளையிக்க அதிகளவு தண்ணீர் அவசியமில்லை. எப்பேர்ப்பட்ட வறட்சியிலும் சிறப்பாக விளையக்கூடிய அரிசி. வறட்சிக்கு ஏற்ற ரகம். சம்பா பட்டத்தில் அதாவது ஆடி மாதத்தில் விதைக்க ஏற்றது. எந்த இரசாயனமும் பூச்சி கொல்லிகளும் இன்றி சிறப்பாக விளையக்கூடிய பாரம்பரிய வெள்ளை அரிசி.

மிளகு சம்பா அரிசி சத்துக்கள்

கொழுப்பு சத்துக்கள், இரும்பு சத்து, துத்தநாகம் (zinc), பொட்டாசியம் சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த அரிசி.

மிளகு சம்பா அரிசி பயன்கள்

இருதய நோய் உள்ளவர்களுக்கு சிறந்த அரிசி. உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அளிக்கும் அரிசி. பொதுவாக இந்த அரிசி சந்தையில் பச்சை அரிசியாக கிடைக்கிறது. உடல் உழைப்பு, விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த அரிசி. உடல் வலிக்கு ஏற்ற பாரம்பரிய வெள்ளை அரிசி. உடல் வலி அசதி உள்ளவர்கள் இந்த அரிசியை உண்பதால் விரைவாக வலியிலிருந்து வெளிவர உதவும்.

மதிய உணவிற்கு ஏற்ற சிறந்த மாற்று பாரம்பரிய அரிசி இந்த மிளகு சம்பா அரிசி. குழம்பு, கூட்டு, ரசம், மோர் என அனைத்துடனும் சேர்த்து மிளகு சம்பா அரிசி சோறு சாப்பிடலாம். நீராகாரம், வெண்பொங்கல், பலகாரங்களுக்கும் சிறந்த அரிசி.

மேலும் மிளகு சம்பா அரிசியைப் பற்றி தெரிந்துக்கொள்ள – மிளகு சம்பா அரிசி.

(4 votes)