நினைவாற்றல் அதிகரிக்க

படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் பல நேரங்களில் வரக்கூடிய ஒரு தொந்தரவு மரத்தி. நமது நினைவில் பல விஷயங்கள் என்றும் பசுமை மாறாமல் நினைவில் இருக்கும். அதேப்போல் காலையில் என்ன உணவு உண்டோம் என்பது பலருக்கும் நினைவில் நிற்காத ஒன்று. இவை இரண்டுமே பெரியவர்களுக்கு அதாவது வயது முதிர்ந்தவர்களிடம் அதிகம் பார்க்கலாம். இந்த இரண்டிற்கும் இடப்பட்ட ஒரு நினைவாற்றல் நமது அன்றாட செயல்களிலும், வாழ்வியல் பயணத்திலும் அவசியமாகிறது. இதற்கு நமது சீரான இரத்த ஓட்டம், ஆரோக்கியமான நரம்புகளும் மிக முக்கியமானது. இவை நமது மூளைக்கு பலமளிப்பதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு நமது உணவும் பெரும்பங்கு வகிக்கிறது.

நினைவாற்றலை அதிகரிக்கும் வழிகள்

  • அன்றாடம் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நமது நரம்புகளையும், இரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மேலும் கீரைகள் இரும்பு சத்துக்களையும் அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
  • சிறுகீரையை வேகவைத்து அதனுடன் சிறிது மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு மசித்து மதிய உணவில் சுடு சாதத்துடன் பசு நெய்யுடன் கீரையையும் சேர்த்து உண்ண நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • ஆரைக்கீரை என்ற நீராரை நினைவாற்றலை அதிகரிக்கும் அற்புத கீரை. இந்த கீரையை பச்சையாக கிடைத்தால் காலை வேளையில் அன்றாடம் ஐந்து கீரையை பச்சையாக பறித்து உண்ண சிறந்தது. இல்லையானால் கிடைக்கக் கூடிய காலங்களில் இதனை எடுத்துவந்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு அன்றாடம் உண்ண நல்ல பலனை பெறலாம்.
  • வல்லரைக்கீரையை சாறெடுத்து பருகுவது அல்லது அவ்வப் பொழுது அடுப்பிலே ஏற்றாமல் சட்னி, பொடி செய்து உண்பது நல்ல நினைவாற்றலை அதிகரிக்கும்.
  • உணவு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் யோகப்பயிற்சியும் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்ய சிறந்த பலனை பெறலாம். நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • மன உளைச்சல், எரிச்சல், பரபரப்பு, மன சோர்வு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நல்ல உறக்கம் அதுவும் அமைதியான இரவு தூக்கம் நினைவாற்றலையும் மூளை செயல்பாடுகளையும் அதிகரிக்க அவைசியமானது. இரவு தூக்கம் சீரானதாக இருக்க வேண்டுமானால் இரவு உணவை எட்டு மணிக்குள் முடித்து விட வேண்டும். இரவு பத்து மணிக்கு படுக்கைக்கு செல்வது ஆரோக்கியத்தின் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு இரகசியம். ஆரம்பத்தில் சற்று கடினமாகவும், தூக்கம் வராததுப் போல் இருக்கும், ஆனால் பழக்கப்படுத்திக் கொண்டால் நமது மூளை சுறுசுறுப்புடனும் நல்ல நினைவற்றளுடனும் புத்துணர்வுடன் செயல்படும்.
(1 vote)