குதிரைவாலி உப்புமா கொழுக்கட்டை

சிறு தானியங்களில் அளவில் சிறிதாக மட்டுமில்லாது மென்மையான தானியமும் இந்த குதிரைவாலி. உடலை சீராக வைக்க உதவும் இந்த தானியம் இரத்த சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது மேலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது. 

Barnyard-millet-in-tamil, Kuthiraivali seeds, barnyard millet seeds, kuthiraivali boiled, kuthiraivali rice, Millet Seeds, Millet Rice, Healthy Millets

குதிரைவாலியில் உள்ள பாஸ்பரஸ் நமது உடலுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். அது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும் அது முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் இந்த குதிரைவாலியின் பயன்கள், நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரிந்துக்கொள்ள – குதிரைவாலி.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு.

சாதாரண ரவை அல்லது வெள்ளை அரிசியில் தயாரிக்கும் கொழுக்கட்டைக்கு மாறாக இந்த சிறுதானிய வகையை சேர்ந்த குதிரைவாலியில் எளிமையாக உப்புமா கொழுக்கட்டை செய்து குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் குதிரைவாலி அரிசி
  • 1 ஸ்பூன் பாசிப்பருப்பு
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • 2 பச்சை மிளகாய்
  • ¼ ஸ்பூன் கடுகு

  • ¼ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • ½ ஸ்பூன் சீரகம்
  • செக்கு கடலை எண்ணெய்
  • உப்பு

செய்முறை

குதிரைவாலி அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

பாசிப்பருப்பு, சீரகத்தை மிக்ஸியில் ரவையாக பொடித்து தனியாக வைக்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

அதில் உப்பு சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.

நன்றாகக் கொதித்ததும், குதிரைவாலி அரிசி, பொடித்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு, சீரகத்தை மெதுவாகப் சேர்த்து கிளறவும்.

முக்கால் பதம் வெந்ததும் இறக்கி விட்டு இளஞ்சூட்டில் இருக்கும்போது தேங்காய் துருவல் சேர்த்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து,

ஆவியில் வேக வைத்துப் எடுத்து பரிமாறவும்.

குதிரைவாலி உப்புமா கொழுக்கட்டை

சிறுதானியங்களில் மிகவும் மென்மையான தானியம் குதிரைவாலி. பல பல சத்துக்கள் நிறைந்தது. சாதாரண ரவை அல்லது வெள்ளை அரிசியில் தயாரிக்கும் கொழுக்கட்டைக்கு மாறாக இந்த சிறுதானிய வகையை சேர்ந்த குதிரைவாலியில் எளிமையாக உப்புமா கொழுக்கட்டை செய்து குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பி உண்பார்கள்.
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 50 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • 1 கப் குதிரைவாலி அரிசி
  • 1 ஸ்பூன் பாசிப்பருப்பு
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • 2 பச்சை மிளகாய்
  • ¼ ஸ்பூன் கடுகு
  • ¼ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • ½ ஸ்பூன் சீரகம்
  • செக்கு கடலை எண்ணெய்
  • உப்பு

செய்முறை

  • குதிரைவாலி அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • பாசிப்பருப்பு, சீரகத்தை மிக்ஸியில் ரவையாக பொடித்து தனியாக வைக்கவும். 
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
  • அதில் உப்பு சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
  • நன்றாகக் கொதித்ததும், குதிரைவாலி அரிசி, பொடித்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு, சீரகத்தை மெதுவாகப் சேர்த்து கிளறவும்.
  • முக்கால் பதம் வெந்ததும் இறக்கி விட்டு இளஞ்சூட்டில் இருக்கும்போது தேங்காய் துருவல் சேர்த்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து,
  • ஆவியில் வேக வைத்துப் எடுத்து பரிமாறவும்.