வரகு அரிசி கஞ்சி / Varagu Porridge
வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது.
பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று. சாதாரண சாதம் முதல் பொங்கல், இட்லி, கஞ்சி, பிரியாணி, முறுக்கு, தட்டை என வித விதமான பலகாரங்களை இந்த வரகரிசியில் தயாரிக்கலாம்.

எளிமையாகவும் விரைவாகவும் வேகக்கூடிய சிறுதானிய வகையை சேர்ந்த வரகரிசி சுவையும், சத்துக்களும் அபரிவிதமாக கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது, அனவைரும் விரும்பி உண்ணக்கூடியது.
மேலும் வரகரிசியின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்துக்கொள்ள – வரகு அரிசி / Kodo Millet in Tamil.

உடலில் ஏற்படும் பல தொந்தரவுகளுக்கு சிறந்த காலை உணவு. நீரிழிவு, உடல் பருமன், இருதய நோய்கள், இரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்தது. காலையில் உணவாக உட்கொள்ள எளிமையாக செரிமானமாவதுடன் இரத்த சர்க்கரையையும் குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்
- ½ கப் வரகு அரிசி
- 10 பல் பூண்டு
- ஒரு துண்டு இஞ்சி
- ½ ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் சீரகம்
- கல் உப்பு
செய்முறை
- வரகரிசியை நனறாகக் களைந்து இருபது நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
- பின் ஒரு மண்பாத்திரத்தில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து அதனில் ஊறவைத்த வரகரிசியையும் சேர்த்து வேகவிடவும்.
- வரகரிசி ஒரு கொதிவந்தவுடன் அதனுடன் தோல் நீக்கிய முழு பூண்டு, நசுக்கிய இஞ்சி, வெந்தயம், சீரகம் சேர்த்து வேகவிடவும்.
- இது நன்கு வெந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- சுவையான சத்தான கஞ்சி தயார். நார்ச்சத்துக்கள், வைட்டமின் மற்றும் பல தாது சத்துக்கள் நிறைந்த சிறந்த காலை உணவு.

வரகு கஞ்சி

பரிந்து இட்ட சோறு பாம்பாய் பிடுங்குகிறது.
உடல் எடை குறைக்க உதவுமா…
ஆம்