Welcome to HealthnOrganicsTamil !!!

மூட்டு வலி ஏற்பட சில காரணங்கள்

வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டி பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. அதிலும் தற்போது நச்சு கலந்த உணவு வகைகள், இயற்கையில் விளையும் பொருளை நேரடியாக உட்கொள்ள முடியாத நிலை, இது போன்ற பல காரணங்களால் வருவது தான் இந்த மூட்டுவலி.

வாத நோய்களில் நாள்பட்ட மூட்டு வலி மிகவும் கடுமையாக இருக்கும். அதிலும் இந்த காலத்தில் இளைஞர்களும் இதனால் அவதிப்படுகின்றனர். இந்த வலி வந்தால், மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு காரணம் உடலில யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும்.

நாளடைவில் பெரிய நோயாக மாறும் இந்த மூட்டு வலிக்கு நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. உணவில் உள்ள கரோட்டீன் மூலம் வலியை நிவாரணம் செய்யமுடியும். இந்த கரோட்டீன் நாம் அன்றாடம் உபயோகிக்கும் வெங்காயத்தில் அதிகப்படியாக உள்ளது.

knee pain, mootu vali, arthitis, mudakku vantham, joint pain food remedy in tamil, health n organics

அதே சமயம் எப்படி ஒருசில உணவுகள் மூட்டு வலிகளுக்கு தீர்வு தருகின்றதோ, அதேப் போல் ஒருசில உணவுகள் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

முக்கியமாக யூரிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளான தக்காளியை அதுவும் இன்று ராசயங்களை கொண்டு விளையும் ஹைபிரிட் தக்காளிகள் சாப்பிட்டால், இன்னும் மூட்டு வலியானது அதிகமாகுமே தவிர குணமாகாது. எனவே வாத நோய்கள் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய தேதியில் முக்கிய வாத நோய்களில் ஒன்றானது ஆர்த்ரிடிஸ், இதனை கட்டுப்படுத்த எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும், எந்த உணவுகளை உண்ண கூடாது என்று தெரிந்து கொள்வதே புத்திசாலித்தனம்.

வெங்காயம்:
சாப்பிடவும், வெங்காயத்தில் க்யூயர்சிடின் (quercetin) என்னும் கெமிக்கல் உள்ளது. இந்த கெமிக்கல் அஸ்பிரின் (aspirin) போன்றே, ஒரு சிறந்வலி நிவாரணி.

சர்க்கரை:
தவிர்க்கவும், மூட்டு வலிகளுக்கு சர்க்கரை மிகவும் கேடு விளைவிக்கும் ஒரு உணவுப் பொருள். ஏனெனில் சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதால், மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும்.

தக்காளி:
தவிர்க்க வேண்டிய முக்கிய பழம். தக்காளியின் விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவானது அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

தானியங்கள்:
தவிர்க்கவும், கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே அவற்றை சாப்பிடும் போது, அவை ஆர்த்ரிடிஸ் நோய்க்கான அறிகுறியை அதிகரிக்கும்.

மஞ்சள்:
சாப்பிடவும், மசாலாப் பொருட்களில் மஞ்சளும் ஒன்று. அதுமட்டுமின்றி, மஞ்சள் ஒரு கிருமி நாசினி. எனவே இதில் உள்ள மருத்துவப் பொருளானது, உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்துவிடும்.

கெஃப்பைன்:
தவிர்க்கவும், கெஃப்பைன் உடலில் வறட்சியை ஏற்படுத்தி, மூட்டுகளில் வலியை அதிகரிக்கும். மேலும் அவை உடலில் உள்ள சத்துக்களை வெளியேற்றி, மூட்டுகளில் வலியை அதிகரிக்கும்.

பூசணிக்காய்:
சாப்பிடவும், பூசணிக்காயில் கரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடுவதால், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் மற்றும் வலிகள் போன்றவற்றை நாளடைவில் குணமாகும்.

க்ரீன் டீ GREEN TEA:
சாப்பிடவும், க்ரீன் டீயில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை உடலின் மூட்டுகளில் ஏற்படும் வலியின் அளவை குறைத்துவிடும். மேலும் இதில் உள்ள நிக்கோட்டின் ஒரு சிறந்த வலி நிவாரணி. நம் ஊர் கொய்யா இலை, புதினா, மா இலை என அருகில் கிடைக்கும் இலைகளை பயன்படுத்தி க்ரீன் டீ சாப்பிடலாம்.

பால்:
தவிர்க்கவும், பாலில் அதிகமான அளவில் ப்யூரின் இருப்பதால், அவை யூரிக் ஆசிட்டின் அளவை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால், நாட்டுமாட்டு பால் கிடைக்க அதனுடன் எட்டு பங்கு தண்ணீர்சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். தேங்காய்ப்பால் சாப்பிடலாம்.

ஆரஞ்சு:
சாப்பிடவும், ஆரஞ்சு பழத்தின் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், அவை எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை தரும்.

இஞ்சி:
சாப்பிடவும், இஞ்சியிலும் மஞ்சளைப் போன்ற மருத்துவக் குணம் உள்ளது. எனவே மூட்டு வலிகள் இருப்பவர்கள் தினமும் இஞ்சியை சேர்த்துக் கொள்வது சிறந்த நன்மையைத் தரும். இஞ்சி டீ குடிக்க அது சிறந்த வலிநிவாரணியாக செயல்படும்.

சமையல் எண்ணெய்:
தவிர்க்கவும், சமையல் எண்ணெய்களான சோயா பீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்களில் அதிகமான அளவில் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இந்த ஃபேட்டி ஆசிட்கள் மூட்டுகளில் காயங்கள் மற்றும் வலிகளை அதிகமாக்கும்.

மது:
தவிர்க்கவும், மது பழக்கத்தால் உடலில் கால்சியம் சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படாமல், எலும்புகளை வலுவிழக்கச் செய்யும். அதிலும் இதனை கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தால், கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, உடல் நிலை மோசமாகிவிடும்.

காய்கறிகளில் தவிர்க்க வேண்டியவை:
கத்திரிக்காய், சிவப்பு குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றில் அல்கலாய்டுகள் அதிகம் இருப்பதால், அவை மூட்டுகளில் காயங்களை அதிகப்படுத்தி, குணமாகிக் கொண்டிருக்கும் மூட்டு வலியையும் குணமாகாமல் தடுக்கும். எனவே இந்த காய்கறிகள் உணவில் சேரமால் கவனம் கொள்ளவும்.

Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது. இந்த முடக்கத்தான் கீரையை அவ்வப்பொழுது உணவாக பயன்படுத்த மூட்டுவலிக்கான சிறந்த பயனளிக்கும். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்தால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள “தாலைட்ஸ்” ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். இந்த கீரையை கொதிக்கவைப்பதுடன் இந்த முறையில் செய்வது மருத்துவகுணங்கள் அழியாமல் பார்த்துக்கொள்ளும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

மதிப்பீடு செய்யவும்
சிந்தனை துளிகள் :

வாய்ப் பந்தல் நிழல் தருமா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!