காராமணி இனிப்பு சுண்டல்

நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு செய்யும் நைவேத்தியம், பிரசாதங்களுக்கு செய்யப்படும் சுண்டல் வகைகளில் இதுவும் ஒன்று. காராமணியை வைத்து இனிப்பு மற்றும் கார சுண்டல் செய்யலாம். கார சுண்டல் செய்ய காராமணியை ஊறவைத்து வேகவைத்து கடுகு, உளுந்து, வரமிளகாய் தாளித்து தேங்காய் துருவல் சேர்க்கலாம். காராமணி இனிப்பு சுண்டல் எவ்வாறு செய்வது எனப் பார்ப்போம். மேலும் நவராத்திரி உணவுகள், சிறப்புகள் பெருமைகளையும் தெரிந்து கொள்வோம்.

karamani-sundal-in-tamil

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ காராமணி
  • 1/2 கிலோ வெல்லம்
  • 1 தேங்காய் துருவல்
  • ஒரு சிட்டிகை உப்பு
  • ஏலக்காய் பொடி

செய்முறை

  • காராமணியை காலையில் ஊறவைக்க வேண்டும்.
  • குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணிநேரம் வரை ஊறிய பின் மாலையில் நீரை வடித்து விட்டு ஓரிரு முறை கழுவி விட்டு சிறிது கல் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
  • நாட்டு சர்க்கரையாக இருந்தால் அதனை அப்படியே வேகவைத்த காராமணியில் சேர்க்கலாம். வெல்லமாக இருந்தால் வெல்லத்தை அரை கப் நீரில் கரைத்து கெட்டிப் பாகாக வைக்கவேண்டும். பின் அதனில் வெந்த காராமணி, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான் சுவையான இனிப்பு சுண்டல் தயார்.

குறிப்புகள்

வெல்லத்திற்கு பதில் நாட்டு சர்க்கரை சேர்க்கலாம். காராமணியை ஊறவைக்க வில்லை என்றால் அரைமணி நேரம் கொதிநீரில் ஊறவைத்து வேகவைக்கலாம்.

karamani-sundal-in-tamil

காராமணி இனிப்பு சுண்டல்

நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு செய்யும் நைவேத்தியம், பிரசாதங்களுக்கு செய்யப்படும் சுண்டல் வகைகளில் இதுவும் ஒன்று. காராமணியை வைத்து இனிப்பு மற்றும் கார சுண்டல் செய்யலாம். கார சுண்டல் செய்ய காராமணியை ஊறவைத்து வேகவைத்து கடுகு, உளுந்து, வரமிளகாய் தாளித்து தேங்காய் துருவல் சேர்க்கலாம். காராமணி இனிப்பு சுண்டல் எவ்வாறு செய்வது எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ காராமணி
  • 1/2 கிலோ வெல்லம்
  • 1 தேங்காய் துருவல்
  • ஒரு சிட்டிகை உப்பு
  • ஏலக்காய் பொடி

செய்முறை

  • காராமணியை காலையில் ஊறவைக்க வேண்டும்.
  • குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணிநேரம் வரை ஊறிய பின் மாலையில் நீரை வடித்து விட்டு ஓரிரு முறை கழுவி விட்டு சிறிது கல் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
  • நாட்டு சர்க்கரையாக இருந்தால் அதனை அப்படியே வேகவைத்த காராமணியில் சேர்க்கலாம். வெல்லமாக இருந்தால் வெல்லத்தை அரை கப் நீரில் கரைத்து கெட்டிப் பாகாக வைக்கவேண்டும். பின் அதனில் வெந்த காராமணி, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான் சுவையான இனிப்பு சுண்டல் தயார்.

குறிப்புகள்

வெல்லத்திற்கு பதில் நாட்டு சர்க்கரை சேர்க்கலாம்.
காராமணியை ஊறவைக்க வில்லை என்றால் அரைமணி நேரம் கொதிநீரில் ஊறவைத்து வேகவைக்கலாம்.