கல்கண்டு பாத்

நவராத்திரி ஒன்பது நாள் விழாவில் கடவுளுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில் ஒன்று இந்த கல்கண்டு பாத். சுவையான இனிப்பு உணவு. பாரம்பரிய பச்சரிசி வகைகளில் இதனை தயாரிக்க மணம், சுவை சத்துக்களும் கூடும். நவராத்திரி உணவுகள், அதன் சிறப்பு, பெருமையை தெரிந்துக் கொண்டு விழாவை கொண்டாடுவோம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி (தூயமல்லி அரிசி)
  • 2 1/2 கப் கல்கண்டு (பனங்கற்கண்டு சிறந்தது)
  • 1 கப் பசு நெய்
  • 1/2 லிட்டர் பால்
  • 10 முந்திரி
  • சிறிது ஏலக்காய் தூள்
  • 2 – 3 குங்குமப்பூ

செய்முறை

  • அடி கணமான பாத்திரத்தில் முதலில் அரிசியை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதனை பால் சேர்த்து நன்கு குழைவாக வேகவிடவேண்டும்.
  • கல்கண்டை சிறிது நீரில் கரைத்து கம்பிப் பாகு பதத்திற்கு பாகாக்க வேண்டும்.
  • இந்த பாகுடன் குழைவாக வேகவைத்த சாதத்தை சேர்த்து சிறுதீயில் நன்றாக கிளற வேண்டும்.
  • ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து அதில் முந்திரி வறுத்து வெந்த சாதத்தில் சேர்த்து அதனுடன் மீதமிருக்கும் நெய், குங்குமப்பூ, ஏலக்காய் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
  • அவ்வளவுதான் சுவையான கல்கண்டு பாத் தயார்.

கல்கண்டு பாத்

நவராத்திரி ஒன்பது நாள் விழாவில் கடவுளுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில் ஒன்று இந்த கல்கண்டு பாத். சுவையான இனிப்பு உணவு. பாரம்பரிய பச்சரிசி வகைகளில் இதனை தயாரிக்க மணம், சுவை சத்துக்களும் கூடும்.
Dessert
Indian
Diet Hindu
Festival Food, Navratri recipe
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 25 minutes