கைவரச் சம்பா அரிசி

மனிதனின் உடல், உயிர் ரகசியங்கள் மட்டும் பிரம்மாண்டமில்லை, உலகில் உள்ள அனைத்துமே புரியாத ரகசியங்களாக தான் உள்ளது.

சாதாரண மனிதர்கள் அந்த ரகசியங்களை வாழ்வின் சுழற்சியில் சாதாரணமாகாவே புரியாமல் நகர்த்துகின்றனர். விஞ்ஞானிகளோ அதன் வெளிப்பாட்டை வைத்துக் கொண்டு ஆராய்கின்றனர் தவிர அதன் சூட்சமத்தை புரிந்துகொள்வதில்லை.

அறிஞர்களோ தங்களுக்கு புரிந்தால் போதும் என்று தங்களுக்கு புரியும் வண்ணம் மட்டும் ஆராய்கின்றனர், புரிந்தும் கொள்கின்றனர். அவர்களின் புரிதல்களில் கிடைத்த சில கருத்துத் துளிகளை அவர்கள் சிந்த அதுவே பெரிய விஷயமாக மற்றவர்களால் பேசப்படுவதும் எதார்த்த உலகில் சாதனையாகிறது. 

இயற்கை, உலகு, உடல், உயிர் இவை ஒவ்வொன்றும் வேறுவேறு இல்லை என்று உணருபவர்களுக்கே இந்த இரகசியங்கள் எளிதில் புரியும்.

இவை அனைத்துமே இயற்கை என்ற ஒற்றை சொல்லில் அடக்கி விட முடியும். இந்த உலகும் இயற்கையே, உயிர், உடல் அனைத்துமே இயற்கைதான். அவ்வாறு இந்த இயற்கையை வழிநடத்த சொல்லி சென்றவர்கள் என்றுமே வாழ்வில் சாதித்தவர்களாகவே வளம் வந்திருக்கின்றனர். 

அது என்ன இயற்கையை வழிநடத்த சொல்லி வழிநடத்துவது என்கின்றனரா? அது வேறு ஒன்றுமே இல்லை, இயற்கையை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவது தான். இப்படி செயல்படுவதால் இயற்கை அதன் தேவையையும், அதன் தன்மையையும் வெளிப்படுத்தும்.

தேவை என்றதும் இயற்கைக்கு தேவை என்பதில்லை. நம்முடன் இருக்கும் உடலுக்கும், உயிருக்குமான தேவைதான்.

இயற்கை, தனக்கான ஒரு செயல்பாட்டை கொண்டுள்ளது அதனை மாற்றவோ அல்லது திருத்தவோ செய்வதால் பின்விளைவுகள் தான் அதிகரிக்குமே தவிர இயற்கையை எந்த மாற்றமும் செய்ய முடியாது. புரிந்து அதற்கு ஏற்றவாறு செயல்ப்பட்டால் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அர்த்தமும் புரியும், காரணமும் புரியும்.

இயற்கை, தனக்கான ஒரு செயல்பாட்டை கொண்டுள்ளது அதனை மாற்றவோ அல்லது திருத்தவோ செய்வதால் பின்விளைவுகள் தான் அதிகரிக்குமே தவிர இயற்கையை எந்த மாற்றமும் செய்ய முடியாது. புரிந்து அதற்கு ஏற்றவாறு செயல்ப்பட்டால் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அர்த்தமும் புரியும், காரணமும் புரியும்.

ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி நடக்கும் பல செயல்பாடுகளுக்கு அர்த்தம் புரியாது அல்லது புரிந்து கொள்ள இயலாது செயல்படுகிறோம். அவ்வாறான ஒரு செயல்பாட்டில் இயற்கையான உடல் என்ன சொல்கிறது என்று புரியாது, அதாவது உடலில் ஒரு வலி வந்தால் அதன் காரணம் என்ன வென்று புரிந்து கொள்ளாமல் அதற்கு வேறு நிவாரணங்களை செய்வது பின்விளைவுகளை அதிகரிக்கிறதே தவிர, உடலில் ஏற்பட்ட வலியினை உண்மையில் சரிசெய்வதில்லை.

அதாவது உடல் வலி என்ற ஒன்றை அனைவரும் நிச்சயம் அனுபவித்திருப்போம். அதிலும் இன்றைய நவீன உலகில் பலர் அதனை நாள் தோறும் அனுபவித்த வண்ணம் வாழ்கின்றனர். சிலர் என்றாவது ஒரு நாள் அதனை அனுபவிக்கின்றனர்.

ஒரு நாளோ அல்லது பலநாள் வலியோ இன்று அதனை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனால் அதற்கென்று ஏதாவது ஒரு தவறான வலி நிவாரண முறைகளை நாடுகின்றனர். இவற்றால் உடலுக்கும், உள்ளத்திற்கும் எந்த நன்மையையும் இல்லை என்று தெரிந்தும் அதனை தீர்க்கவும் வழி தெரியாமல் உடலை வருத்திக்கொள்கின்றனர். இதனால் உடலில் உள்ள உறுப்புக்கள் பலவீனமடைவதுடன் காரணம் தெரியாத பல புதுப் புது நோய்களும் தாக்குகிறது.

பொதுவாக உடல் வலி, முதுகு வலி, தலை வலி, கை கால் வலி, வயிற்று வலி என்பதெல்லாம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று தான். இவை அன்றைய கடினமான வேலை காரணமாகவும், தீடீரென்று செய்த உடல் அசைவு காரணமாகவும் ஏற்படுவது. இது ஓர் இரண்டு நாட்களில் சீராகி விடும் வலிகள். அதுவும் தொடர்ந்து யோகா, சூரிய நமஸ்காரம் போன்ற பயிற்சிகளை செய்பவர்களுக்கு ஒரே நாளில் சரியாகி விடும். 

ஒரு நாளுக்கு மேல் தொடரும் தலைவலி, வயிற்று வலி, மூட்டு வலி, கை கால் வலி போன்றவற்றிற்கு காரணம் இயற்கையை புரிந்து கொள்ளாமல் எதாவது செய்வது தான்.

தவறான உணவுப் பழக்கமும், தவறான வாழ்வியல் பழக்கங்களும் தான் காரணமாகிறது. வலி நிவாரண மருந்து மாத்திரைகள், சத்தற்ற உணவு பழக்கங்கள், சீரான தூக்கமின்மை, அதிகப்படியான கவலை, தேவையற்ற பயம், வாழ்க்கையின் எதிர்கால கவலை என ஒன்று இரண்டு காரணங்கள் இல்லை, பல பல தேவையற்ற காரணங்கள், இயற்கையை… மறப்பதால் வருகிறது…

பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட தருணம் இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம். இன்பத்தை  அனுபவித்து, இயற்கையின் கட்டளைகளை ஆனந்தமாக  நிறைவேற்றவே இந்த தருணம்.

இயற்கையின் கட்டளைகள் என்றதும் பயப்படவேண்டாம், நமக்காக இயற்கை கொடுத்த இந்த பிரபஞ்சம், பஞ்சபூதம், உடல், உயிர் இவற்றின் தேவைகளைத்தான் கூறுகிறேன்.

நாவினையும், மனதினையும் அடக்கி உடலும் உயிரும் கூறுவதனை கவனித்தாலே இவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம். 

இயற்கை என்றதும் சூரியனையும் சந்திரனையும் ஒப்பிடும் நாமும் அதன் இனமே. இதனை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப இசைத்தாலே உடல் வலியின் காரணங்களும் புரியும், உடல் வலியும் உடலில் ஏற்படும் மற்ற வலிகளும் காணாமல் போகும்.

பல யோகா வகுப்புகளில் இதனை எளிதாக பலர் கண்டு கொண்டு சரியாக்குவதும் நடைமுறையில் சாத்தியமாகிறது. அதாவது படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு, கை கால்களையும், உடலையும் லேசாக வைத்துக்கொள்ள உடலை பொறுமையாகவும், நிதானமாகவும் ஒவ்வொரு அங்கங்களாக கவனித்து வர அந்த அங்கத்திலும், அந்த உறுப்பிலும் ஏதாவது வலியோ பாதிப்போ இருந்தால் அதனை அந்த நேரத்தில் உடல் வெளிப்படுத்தும்.

இதனை அறிந்து கொண்டு அந்த இடத்தில் கவனத்தை வைத்தாலே பல தொந்தரவுகள் தீர்ந்துவிடுகிறது. இதுவும் ஒரு வகையில் இயற்கையான உடலை புரிந்து அதன் வழியில் செல்வது தான்.

இதனால் தான் என்னமோ இந்தியர்கள் இவற்றை பயன்படுத்துகின்றாரோ இல்லையோ உலகத்தார் இதற்கு பல பெயர்களை சூட்டி ஒவ்வொரு நாளும் பின்பற்றிவருகின்றனர்.

‘ தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் ‘ என்று ஒவ்வொருவரும் சீறுவது புரிகிறது.. அதே சமயம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், எந்த வலியும் முன் சொன்ன மாதிரி ஒரே நாளில் கடுமையாக வருவதில்லை, நமது பழக்கங்கள் தான், வாழ்வியல் பழக்கமும், உணவு பழக்கமும் என்பதை மறந்து விடக் கூடாது.

அது சரி உடலில் ஏற்படும் வலிகளுக்கு காரணங்கள் பலவாக இருந்தாலும் சில முக்கியமான அன்றாடம் ஒவ்வொரு வரும் சந்திக்கும் காரணங்களும் உள்ளது. சத்தற்ற உணவு வகைகளை தொடர்ந்து உண்பதால் உடலில் போதுமான சக்தி இல்லாது நாளடைவில் வலி ஏற்படுகிறது. அதிகப்படியான சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய் உணவுகள், எலும்பை அரிக்கும் இரசாயன இனிப்பு பலகாரங்கள் போன்றவை உடலில் உள்ள சத்துக்களை சுரண்டிவிடுகிறது.

அதிலும் சூரிய ஒளி உடலில் படாமல் குளிர்சாதன அறையில் தொடர்ந்து இருக்க இந்த வலிகள் விரைவில் அதிகரிக்கிறது.

மலச்சிக்கல், வாயு கோளாறு போன்றவையும் மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவற்றிற்கு காரணமாகிறது. ஒரே இடத்திற்கு அதிக வேலை பளுவை கொடுப்பதும், ஒரே இடத்தில அதிக நேரம் சரியாக உட்காராமல் முதுகு தண்டு கூனி உட்கார்ந்து இருப்பதும் இந்த தொந்தரவுகளுக்கு காரணமாகிறது.

வாழ்வியல் பழக்கங்கள் பலவும் இந்த வலிகளுக்கு காரணமாக இருப்பினும் அவற்றை எளிதில் மாற்றிக்கொள்ள முடியும். அதே போல் இந்த வலிகளுக்கு உணவின் மூலமும் சுலபமான தீர்வு உண்டு, ஆம் நமது பாரம்பரிய அரிசியின் மூலம் உடலில் உள்ள வலிகளை எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும்.

உடல் வலியை தீர்க்கும் கைவரச் சம்பா

கைவரச் சம்பா என்ற பாரம்பரிய அரிசி நமது வலிகளைப் போக்குவதில் பேருதவியாக உள்ளது. கைவரச் சம்பா என்பது அரிசியின் பெயர். எந்த ரசாயனமும் இல்லாது அனைத்து மண்ணிலும் விளையக்கூடிய அரிசி தான் இந்த கைவரச் சம்பா அரிசி.

கைவரச் சம்பா அரிசியின் நிறம்

பல வண்ணங்களில் அரிசி உள்ளது என்று அறிந்த நாம் இந்த கைவரச் சம்பா அரிசி சிகப்பு நிற மோட்டா ரக அரிசி என்பதையும் தெரிந்து கொள்வோம். 

நோய் நீக்கும் அரிசி கைவரச் சம்பா அரிசி

நரம்பியல் சம்மந்தமான பல தொந்தரவுகளுக்கு மா மருந்தாக இந்த அரிசி அமைகிறது. மேலும் உடலில் ஏற்படும் பல வகையான வலிகளுக்கும் இந்த அரிசி சிறந்த நிவாரணம் அளிக்கிறது. உடலில் உள்ள நச்சு நீரையும் எளிதில் இந்த அரிசியின் வடி தண்ணீரில் தீர்க்கலாம்.

கைவரச் சம்பா சத்துக்கள்

பல தாது உப்புக்கள் மற்றும் போலிக் அமிலம், அண்டி ஆக்சிடன்ட் நிறைந்த அரிசி இந்த பாரம்பரிய அரிசி. இதில் தொடர்ந்து பலகாரங்கள் செய்து உண்ண நல்ல பலன் கிடைக்கும்.

என்னென்ன உணவுகள் இதில் தயாரிக்கலாம்

இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, புட்டு போன்றவற்றை செய்து தொடர்ந்து உண்ண உடலில் ஏற்பட்டிருக்கும் தலை வலி, இடுப்பு வலி, முதுகு வலி, வயிற்று வலி, மூட்டு வலி, கைகால் வலி என சகல விதமான வலிகளும் நீங்கும். சாத வகைகளை விட பலகாரங்களுக்கு சுவையாக இருக்கும் இந்த கைவரச்சம்பா அரிசி.

அனைத்து வயதினருக்கும் ஏற்றது இந்த அரிசி. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும், உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் ஏற்ற அரிசியுமாக உள்ளது. 

கைவரச் சம்பா அரிசி அவலும் சுவையானதாக இருக்கும். இந்த அவலில் இனிப்பு பாயசம், லட்டு / உருண்டை தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்க எதையும் உண்ண மறுக்கும் குழந்தையும் விரும்பி உண்பார்கள். 

அதிக உடல் அசதி இருக்கும் சமயம் எளிதாக கைவரச் சம்பா அரிசியினை வடித்த நீரைக் கொண்டு தீர்க்கலாம்.

அதாவது 2 மணி நேரம் கைவரச் சம்பா அரிசியினை ஊறவைத்து அதனை மண்பானையில் வேகவைத்து மீதமிருக்கும் நீரினை வடிக்கவும். இந்த வடித்த இளம் சூடான நீரினை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி இரண்டு கால்களையும் சற்று நேரம் வைத்திருக்கவும். இவ்வாறு செய்ய உடல் அசதி, உடல் வலி காணாமல் போகும். வேகவைத்த அரிசியினை குழம்பு, ரசம், மோர், கூட்டு பொரியலுடம் உண்ணலாம்.

இயற்கையின் வரப்பிரசமான இந்த கைவரச் சம்பா அரிசி இயற்கையுடனான நமது புரிதலை எளிதில் புரியவைப்பதுடன் வாழ்க்கைக்கு இயற்கையின் பரிசான உடலையும் உயிரையும் காக்கவும் உதவுகிறது. நல்ல உணவும், வாழ்வியலும் என்றும்  இயற்கையை நமக்கு புரிய வைக்கும்.

(3 votes)