vegetables, select fresh vegetables in tamil, good vegetables, naatu kaai, organic vegetables

காய்களை எவ்வாறு பார்த்துவாங்க வேண்டும்..

அன்றாடம் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது..

vegetables, select fresh vegetables in tamil, good vegetables, naatu kaai, organic vegetables
  • தக்காளி : நாட்டு தக்காளி வாங்குவது சிறந்தது. அதன் மேல்தோல் லேசாக மிருதுவாக இருக்கும்.
  • முருங்கைக்காய் : முருங்கைக்காயை சிறிது கைகளால் முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல‍ முருங்கைகாய்.
  • பூண்டு : பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்.

  • வாழை தண்டு : கிள்ளிப்பார்க்க இலேசாக இளம் தண்டாக இருக்கவேண்டும். மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
  • கோவைக்காய் : முழுக்க பச்சையாக சற்று கடினமாக இருக்க பார்த்து வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்.

  • சின்ன வெங்காயம் : பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும். அதிலும் நாட்டு ராகம் காரம் குறைவாக இருக்க சுவையாக இருக்கும்.
  • மாங்காய்– தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்.

  • பீர்க்கங்காய் : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது. நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது.
  • புடலங்காய் : நீடுபுடலை சுவையும் சத்துக்களும் மிக்கதாக இருக்கும். கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்.

  • பெரிய வெங்காயம் : மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
  • இஞ்சி : லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்.
  • கத்திரிக்காய் : தமிழகத்தில் நாட்டு ரக கத்திரிக்கைகள் பல உள்ளன. அவற்றை அந்தந்த பருவக்காலத்திற்கு ஏற்ப வாங்குவது சிறந்த சுவையும் சத்துக்களும் நிரந்ததாக இருக்கும்.

  • சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்.
  • அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது.
  • பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது. அதைவிட நல்லது மிதிப்பகல் எனப்படும் சிறு காட்டுப் பாகற்காய். புதிதாக இருக்கும் பொழுதே சமைக்க கசப்புச்சுவையே தெரியாது.

  • வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் நல்ல பூ.
  • மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும். சற்று மேல்தூள் நிறம்மாறியிருந்தால் நன்று.
  • சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றியகாய்.

  • முள்ளங்கி: லேசாக கீற தோல் மென்மையாக இருந்தால் அது இளங்காய், நல்ல காய்.
  • வெள்ளரி : மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
  • பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.