கொண்டைக்கடலை சுண்டல்

நவராத்திரி ஒன்பது நாள் விழாவில் சரஸ்வதி பூஜைக்கு கட்டாயம் இடம் பெரும் சுண்டல் கொண்டைக்கடலை சுண்டல். உடலுக்கு தேவையான சத்துக்களையும், சிறந்த புரத சத்துக்களையும் கொண்ட பயறு கொண்டைக்கடலை. கொண்டைக்கடலை அனைவருக்குமே பரிச்சயமான ஒரு பயறு. ஊறவைத்தும் இந்த சுண்டலை தயாரிக்கலாம். ஊறவைத்து முளைக்கட்டியும் இதனை தயாரிக்கலாம். இனி கொண்டைக்கடலை சுண்டல் செய்முறையை பார்க்கலாம். நவராத்திரியின் பெருமை, உணவு, சிறப்புகளையும் இனி தெரிந்துக் கொள்வோம்.

chickpea-sundal-tamil

தேவையான பொருட்கள்

  • 2 கப் கருப்பு கொண்டைக்கடலை
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுந்து
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 2 வரமிளகாய்
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • சிறிது கருவேப்பிலை
  • உப்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • எண்ணெய்

செய்முறை

  • கொண்டைக்கடலையை எட்டு முதல் பத்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • நன்கு ஊறிய பின் சிறிது கல் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம் வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேகவைத்தவற்றுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான் சுவையான சத்தான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

குறிப்புகள்

கூடுதல் சுவைக்கு தேங்காய், சிறிது வரமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்தும் இறுதியில் கிளறலாம்.

(2 votes)