ஆரைக் கீரை ஜூஸ்

மழை காலங்களில் அதிகம் கிடைக்கக் கூடிய கீரை இந்த ஆலக்கீரை. ஆலக்கீரை, ஆரைக்கீரை, நீராரை என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த கீரை உடலுக்கு சிறந்த பலத்தை அளிக்கும், மூளையின் செயல் திறனை அதிகரிக்கும், நீரிழிவை கட்டுபடுத்தும், மலச்சிக்கலுக்கு சிறந்தது.

இந்த கீரையை சமைத்து உண்பதுடன் பச்சையாக சாப்பிட பல உடல் உபாதைகள் மறையும். இந்த ஆலக்கீரையைப் பயன்படுத்தி இவ்வாறு இயற்கையான ஆலக்கீரை ஜூஸ் செய்து காலையில் பருகுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற கீரை.

இதனை பருகுவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது நிற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக அமைகிறது. ஜீரணப்பாதை சீராகும், கொழுப்புச்சத்து வெளியேறும்.

தேவையான பொருட்கள்

  • ஒரு கையளவு அரைக்கீரை
  • ஒரு சிட்டிகை மிளகுத்தூள்
  • 3 சிட்டிகை சீரகத்தூள்
  • சிறிது இந்துப்பு

செய்முறை

  • அரைக்கீரையை ஆய்ந்து, நன்றாக கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவேண்டும்.
  • அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • பின் அரைத்தவற்றை துணியில் வடிகட்டி சாறு எடுக்கவேண்டும்.
  • அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்க்க சத்துக்கள் நிறைந்த தொண்டைக்கு இதமான ஆராக்கீரை ஜூஸ் தயார்.
  • காலையில் பருகுவது சிறந்தது.

ஆரைக் கீரை ஜூஸ்

ஆலக்கீரை, ஆரைக்கீரை, நீராரை என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த கீரை உடலுக்கு சிறந்த பலத்தை அளிக்கும், மூளையின் செயல் திறனை அதிகரிக்கும், நீரிழிவை கட்டுபடுத்தும், மலச்சிக்கலுக்கு சிறந்தது.
இந்த கீரையை சமைத்து உண்பதுடன் பச்சையாக சாப்பிட பல உடல் உபாதைகள் மறையும். இந்த ஆலக்கீரையைப் பயன்படுத்தி இவ்வாறு இயற்கையான ஆலக்கீரை ஜூஸ் செய்து காலையில் பருகுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற கீரை.
இதனை பருகுவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது நிற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக அமைகிறது. ஜீரணப்பாதை சீராகும், கொழுப்புச்சத்து வெளியேறும்.
ஆயத்த நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 5 minutes