நீட்டல் அளவை

  • 10 கோண் = 1 நுண்ணணு
  • 10 நுண்ணணு = 1 அணு
  • 8 அணு = 1 கதிர்த்துகள்
  • 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
  • 8 துசும்பு = 1 மயிர்நுனி
  • 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
  • 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
  • 8 சிறு கடுகு = 1 எள்
  • 8 எள் = 1 நெல்
  • 8 நெல் = 1 விரல்
  • 12 விரல் = 1 சாண்
  • 2 சாண் = 1 முழம்
  • 4 முழம் = 1 பாகம்
  • 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
  • 4 காதம் = 1 யோசனை

நீட்டலளவை வழியளவை, நிலவளவையென இருவகைப்படும்.

வழியளவை

  • 8 தோரை(நெல்) = 1 விரல்
  • 12 விரல் = 1 சாண்
  • 2 சாண் = 1 முழம்
  • 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
  • 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
  • 4 குரோசம் = 1 யோசனை
  • 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)
  • 4840 சதுர கெசம் = 1 ஏக்கர்
  • 436 குழி = 1 ஏக்கர்
  • 5 பர்லாங்கு = 1 கிலோமீட்டர்
  • 8 பர்லாங்கு = 1 மைல்

நிலவளவை

  • 16 சாண் = 1 கோல்
  • 18 கோல் = 1 குழி
  • 100 குழி = 1 மா
  • 240 குழி = 1 பாடகம்
  • 20 மா = 1 வேலி
  • 1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) – 8 சென்ட்
  • 12.5 மரக்கால் வேலைபாடு – 100 சென்ட் – 1 ஏக்கர்
  • 40 மரக்கால் = 1 புட்டி
  • 1 குழி – 100 சதுர அடி
  • 1 மா – 100 குழி (10000 சதுர அடி)
  • 1 காணி – 4 மா (40000 சதுர அடி = 92 சென்ட் = 0.92 ஏக்கர்) – 400 குழி
  • 1 வேலி – 7 காணி (6.43 ஏக்கர் = 2.6 ஹெக்டர்)
  • 1 பர்லாங்கு – 220 கெசம் (660 அடி)
  • 1 நிலம் (ground) – 2400 சதுர அடி – 5.5 சென்ட் – 223 சதுர மீட்டர்

குழிக்கணக்கு என்றும் இதனைக் குறிப்பிடுவதுண்டு.

  • 18 முழம் கொண்டது – 1 புடைவை
  • 8 புடைவை – 1 சாம்பு
  • 80 சாம்பு – 1 கோடி
  • 2 கோடி அல்லது 4 வேட்டி – 1 மடி
  • 5.மடி – 1 கோடி
  • 1 கோடி – 2 1/2 சவுக்களி

இன்று இவை மறைந்து ஆங்கில அளவு முறைகளை பின்பற்றுகிறோம்.

(6 votes)