தேமோர் கரைசல் – 2

வீட்டுத் தோட்டத்திற்கும், விவசாய நிலத்திற்கும் பயன்படும் ஒரு சிறந்த வளர்ச்சி ஊக்கியை எவ்வாறு தயார் செய்வது என்பதைத்தான் தெரிந்துக் கொள்ளபோகிறோம். இதனை தயாரித்து பயன்படுத்துவதால் நமக்கு செலவும் குறையும் பயிர்கள் நன்கு செழித்து ஓரே சீராக வளரும்.

நமக்கு தேவையான இரண்டு பொருட்கள் தேங்காயும், புளித்த மோரும். தேங்காய் பாலும், புளித்த மோரும் கலந்த கலவையே இந்த தேமோர் கரைசல் என்பதாகும். இது ஒரு சிறந்த எளிமையான பயிர்வளர்ச்சி ஊக்கியாகும்.

இதனை மூன்று முறைகளில் தயாரிக்கலாம். அதில் முதல் முறை இது. மற்ற முறைகளை தெரிந்தகொள்ள

தேமோர் கரைசல் 1 வது முறை

தேமோர் கரைசல் 3 வது முறை

தேமோர் கரைசல் பயன்கள்

  • மண் வளமாக இருக்கும். பயிர் செழித்து வளர்வதற்கும் உதவி புரிகிறது.
  • பூக்கள் பூக்கும் தருணத்தில் பயிர்களின் மேல் இந்த தேமோர் கரைசலை தெளிப்பதின் மூலம் பூக்கள் உதிராமல் நிலைக்கும். பூ ஊதிர்வு கட்டுப்படும்.
  • மண்வளத்தை பாதுகாக்கவும் நுண்ணுயிர்கள் வளர்வதற்கும் பெரிதும் உதவுகிறது.
  • பயிர்கள் நன்கு செழித்து வளரும். பயிர்களில் பூக்கும் திறனை அதிகரிக்கும்.
  • பூ, பிஞ்சுகள் அதிகம் பிடிக்கும். தரமான காய்கள் கிடைக்கும்.
  • பூச்சிகளை விரட்டக் கூடிய ஆற்றல் கொண்டது.
  • பூஞ்சாண நோயை தாங்கி வளரும்.
  • காய்கள், பழங்கள் நல்ல பளபளப்புடனும், சுவையுடனும் இருக்கும்.

தேமோர் கரைசல் தயாரிப்பு முறை 2

தேவையான பொருட்கள்
புளித்த மோர் – 5 லிட்டர்
தேங்காய் – 10
இளநீர் – 1
அழுகிய பழங்கள் – 10 கிலோ

தயாரிக்கும் முறை

This image has an empty alt attribute; its file name is theemoore-karaisal-plant-gr.jpg
This image has an empty alt attribute; its file name is coconut-milk-plant-growth-p-500x326.jpg

தேங்காயை முதலில் துருவிக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் அழுகிய பழங்களை ஒரு துணியில் போட்டு பொட்டலமாக கட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு பிளாஸ்டிக் வாளியில் / மண்பானையில் புளித்த மோரினையும் இளநீரினையும் சேர்த்து அதனுடன் தேங்காய் பழங்களை கொண்ட பொட்டலத்தையும் சேர்க்க வேண்டும். இந்த வாளியை ஒரு மெல்லிய துணிகொண்டு மூடி 7 நாட்கள் நன்கு கலந்து வைக்க வேண்டும்.

7 நாட்கள் வரை ஊறவிட்டு தினமும் கலக்கி விட வேண்டும். ஏழு நாட்களுக்குள் கரைசல் தயாராகிவிடும். பயிர்களுக்கு எடுத்து பயன்படுத்தலாம்.

7 நாட்கள் கழித்து, நன்கு கலக்கி, வடிகட்டி பயிருக்கு தெளிக்க பயன்படுத்தலாம்.

(மண்பானையில் ஊற்றி வைக்கும் கரைசலை எரு குப்பை அல்லது மண்ணில், பானையின் வாய் பகுதியை மட்டும் மேலே தெரியும்படி வைத்துவிட்டு, குழி தோண்டி புதைத்தும் வைக்கலாம்).

  • அனைத்து வகை  பயிர்களுக்கும் தெளிக்கலாம். 
  • தெளிக்கும்போது பயிர்களில் நன்கு நனையுமாறு மாலை வேளையில் தெளிக்க வேண்டும் 
  • பூ பூக்கும் சமையத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு, மூன்று  முறை தெளிக்க வேண்டும்.

பயன்படுத்தும் பயிர்கள்

காய்கறி பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள், மரங்கள், தானியப்பயிர்கள், பயறு வகை பயிர்கள், பணப்பயிர்கள், மலர்கள் போன்ற அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

தெளிக்கும் அளவு

10 லிட்டர் தண்ணீருக்கு – 1 லிட்டர் தேமோர் கரைசல்.

இதனை தயாரித்த ஒரு வாரத்திற்குள் பயன்படுத்துவது சிறந்த மகசூலை தரும்.

மிக எளிமையாக அதே சமயம் ஊட்ட சத்துக்களும் மிகுந்த ஒரு வளர்ச்சி ஊக்கித்தான் இந்த தேமோர் கரைசல். வீட்டிலிருக்கும் இரண்டு பொருட்களை வைத்து மிக எளிமையாக தயாரிக்கலாம் இந்தக் கரைசலை.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு