பிரண்டை பசி உணர்வை தூண்டும். வரகு அரிசி மாதவிடாய் பிரச்னை உடைய பெண்களுக்கு ஏற்ற நல் உணவு. வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும் சிறந்த உணவு இந்த பிரண்டை வரகு தோசை. சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த உணவு.
தேவையான பொருட்கள்
- 2 கப் வரகு அரிசி
- 1/4 கப் உளுந்து
- சிறிது வெந்தயம்
- 10 நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு செக்கு நல்ல எண்ணெய் / நெய்
செய்முறை
- வரகு அரிசியையும், வெந்தயம், உளுந்தையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
- ஊற வைத்த வரகரிசி, வெந்தயம், உளுந்தை அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து வைக்கவும்.
- கணு நீக்கி பிரண்டையை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
- ஆறியவுடன் நன்றாக அரைத்து வரகு அரிசி மாவுடன் கலக்கவும். மாவு 8 மணி நேரமாவது புளிக்க வேண்டும்.
- தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
- பிரண்டை பசி உணர்வை தூண்டும், வரகு அரிசி மாதவிடாய் பிரச்னை உடைய பெண்களுக்கு ஏற்ற நல் உணவு. வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.
- பிரண்டை வரகு தோசை, சத்தான மருத்துவ குணம் நிரந்த காலை உணவு.
பிரண்டை வரகு தோசை
பிரண்டை பசி உணர்வை தூண்டும், வரகு அரிசி மாதவிடாய் பிரச்னை உடைய பெண்களுக்கு ஏற்ற நல் உணவு. வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.
பரிமாறும் அளவு : – 4