thrips, Illaipeen, Organic Fertilizer, Natural Pesticide, Iyarkai Uram, aswini poochi, kambili pochi, Herbal Pesticide, Manjal Karaisal, iyarkai poochi virati, natural pesticide, organic pesticide, sivappu silanthi

வெஜிடேரியன் / நான்வெஜிடேரியன் பூச்சிகள்

இதற்கு முன் பூச்சிகள் இந்த உலகிற்கும், உணவுச்சங்கிலிக்கும் அவசியமானது என்பதை பார்த்தோம். அதனால் பூச்சிகளைக் கொல்லாது பூச்சிகளை இயற்கையான முறையில் எவ்வாறு எளிமையாக விரட்டுவது என்றும் தெரிந்துக்கொண்டோம். இனி உணவுச்சங்கிலியில் முக்கியமான இடத்தைப்பிடித்திருக்கும் பூச்சிகள் இனத்தில் நமக்கு அவசியமான அதாவதும் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும், காய்கறிவளர்ப்பவர்களுக்கும் அவசியமான பூச்சிகளைப்பற்றி பார்ப்போம்.

பூச்சிகள்

பூச்சிகள்  என்றவுடன் இன்றும் பரவலாக பெரும்பாலானவர்கள் பயப்படுவதற்கு காரணம் பூச்சிகள் செடிகளை அழித்துவிடுவதுதான். சரி பூச்சிகளை பற்றியும் பூச்சிகளின் வகைகள் பற்றியும் பூச்சி நமக்கு நன்மை அளிக்குமா அல்லது தீமை மட்டும்தான் அளிக்குமா என்பதை பற்றியும் இனி பார்ப்போம்.. பூச்சிகள் என்றதும் அவை செடிகளை உண்பது, இலைகளை திண்பது, செடிகளில் சாறுகளை உண்பது, செடிகளில்  வாழ்வது என்பதை மட்டுமே இதுவரை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஒவ்வொரு வயலிலும் ஒவ்வொரு தோட்டத்திலும் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. ஒன்று செடிகளை உண்ணக்கூடிய அல்லது செடிகளை சார்ந்து வாழக்கூடிய பூச்சிகள் மற்றொன்று பூச்சிகளை உண்ணக்கூடிய பூச்சிகள் அதாவதும் மற்ற பூச்சிகளை இரையாக உண்ணக்கூடிய பூச்சிகள். இவற்றை எளிதாக புரிந்துகொள்ள வெஜிடேரியன் பூச்சிகள்நான்வெஜிடேரியன் பூச்சிகள் என்று வைத்துக் கொள்ளலாம்.

வெஜிடேரியன் பூச்சிகள் / தீமை செய்யும் பூச்சிகள்

இதில் வெஜிடேரியன் பூச்சிகள் என்பது செடிகளை உண்ணக்கூடியது. செடிகளை சார்ந்த வாழக்கூடியது. இவைகள் தான் செடிகளை அழிக்க கூடியது.

இலைதழைகளை உண்ணக்கூடிய வெஜிடேரியன் பூச்சிகள் என்பவை நமது தோட்டங்களில் இருக்கக்கூடிய செடிகளையும் நமது தோட்டங்களில் இருக்கக்கூடிய காய்கனிகளையும் உண்ணக்கூடியவை. இவற்றால் நமது செடிகளுக்கு அழிவு ஏற்படுகிறது. அதனால் இவற்றை தீமை செய்யும் பூச்சிகள் என்று அழைக்கிறோம்.

பொதுவாக இந்த தீமை செய்யும் பூச்சிகள் செடிகளின் அடி பகுதிகளிலும், இலைகளின் அடிப்பகுதிகளிலும், செடிகளின் தண்டுகளில், வேர்ப்பகுதிகளிலும் வாழக்கூடியவை. அதாவது மறைந்து, ஒளிந்து வாழக்கூடியது என்று வைத்துக் கொள்ளலாம்.

நான்வெஜிடேரியன் பூச்சிகள் / நன்மை செய்யும் பூச்சிகள்

நான் வெஜிடேரியன் பூச்சிகள் என்பது பூச்சிகளை உண்ணக்கூடிய பூச்சிகள். இவை தனக்குத் தேவையான பூச்சிகள் எங்கிருக்கிறது என்று தேடித்தேடி அவற்றை விழுங்கக் கூடியது. இவற்றால் செடிகளுக்கு எந்த சேதமும் ஏற்படாது மேலும் இவை செடிகளை உண்ணக்கூடிய பூச்சிகளையும் சேர்த்து உண்பவை அதனால் இவற்றை நன்மை செய்யும் பூச்சிகள் என்று பொதுவாக அழைப்பது வழக்கம். அதாவது பூச்சிகளை உண்ணக்கூடிய பூச்சிகள் நமக்கு நன்மையை அளிக்கிறது. அதனால் நன்மை செய்யும் பூச்சிகள்

அதுவே நன்மை செய்யும் பூச்சிகள் அதாவது பூச்சிகளை உண்ணக்கூடிய பூச்சிகள் செடிகளில் மேற்புறத்தில் இருக்கக் கூடியவை. இவை தனது இரையை தேடுபவை, அதனால் மேலோட்டமாக இருப்பவை. பொதுவாக ஒரு தோட்டத்தில் பூச்சிகள் என்று நாம் நினைக்கும் பொழுது, இவை கண்ணில் எளிதாக தென்படுபவை.