thathu palam athigarikka

தாது பலம் பெற

இன்று உணவின் தரம் குறைந்து விட்டது, உணவில் அதிக இரசாயனங்கள், நச்சுக்கள் சேர்ந்துவிட்டது, சத்தான உணவு என்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. பாரம்பரிய உணவு, சத்துக்கள் நிறைந்த உணவு என்பதெல்லாம் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. உண்ணும் உணவுகள் வயிற்றை நிரப்பும் உணவுகளாகவும் உடலின் பலத்தையும், ஊட்டத்தையும் பெருக்கும் உணவுகளாகவும் இல்லை.

இவ்வாறு உணவு மாற்றமடைய நம்மை அறியாமலேயே நமது உடலின் தாதுவும் குறைந்து விட்டது. இளம் வயதிலேயே உடல் உபாதைகள், நோய்கள், குழந்தையின்மை, மலட்டுத்தன்மை, ஆண்மை குறைவு என பல தொந்தரவுகள் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து நம்மை காக்கவும், நமது தாது பலத்தை அதிகரிக்கவும் நமது மூலிகைகள் மற்றும் எளிய உணவுகள் அளிக்கும் சில வழிமுறைகளை மேற்கொள்ள நல்ல பலனை விரைவாக பெற முடியும். மேலும் இவற்றுடன் முடிந்தவரை சத்தான உணவுகளை உட்கொள்வது நல்ல பலனை விரைவில் அளிக்கும். இனி எளிதாக பின்பற்றக்கூடிய சில சில வழிகளை பார்க்கலாம்.

thaathu palam athigarikka

தாது இழப்பு தீர

நெய்யில் ஜாதிக்காய் பொடியும் பிரண்டை உப்பும் சேர்த்து சாப்பிட்டு வர தாது இழப்பு தீரும்.

தாது பலம் அதிகரிக்க

தாது பலத்தை அதிகரிக்க வில்வ மரத்தின் வேர் பட்டையை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் ஒரு சிட்டிகை அளவு சீரகம் சேர்த்து நன்கு அரைத்து பாலில் கலந்து பருகி வர விரைவில் தாது பலப்படும். அதேப்போல் முருங்கை பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலுடன் சேர்த்து காலை, மாலை என இரு வேளை பருகி வர தாது பலம் அதிகரிக்கும்.

தாது விருத்தி அதிகரிக்க

முருங்கை இலையை நெய்யில் வதக்கி பொரியலாக நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட தாது விருத்தி அதிகரிக்கும்.

தாது பெருக

வாழைப் பூவை பாசிப் பருப்புடன் சமைத்து சாப்பிட தாது பெருகும்.