நவராத்திரிக்கு செய்யப்படும் நைவேத்தியம் பிரசாதங்களில் மிக சுலபமாகவும் விரைவாகவும் வீட்டிலிருக்கும் பாசிப்பருப்பை வைத்து செய்யப்படும் சுண்டல் இந்த பயத்தம் பருப்பு சுண்டல். வீட்டில் நாம் செய்யும் அனைத்து உணவுகளுக்கும் பயத்தம் பருப்பை குழைவாக வேகவைத்தே செய்வோம். ஆனால் இந்த சுண்டலுக்கு பயத்தம் பருப்பு குழைவாக வேகக் கூடாது அதனால் மிக கவனமாக பயத்தம் பருப்பை வேகவைத்து சுண்டல் செய்யவேண்டும். இனி பயத்தம் பருப்பு சுண்டல் எவ்வாறு செய்வது எனப் பார்ப்போம். நவராத்திரி பிரசாதங்கள், உணவுகள், சிறப்பு, பெருமை, பாரம்பரியம் ஆகியவற்றையும் இந்த இணைப்பில் தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்
- 2 கப் பாசி பருப்பு
- 1 ஸ்பூன் உளுந்து
- 1 ஸ்பூன் கடுகு
- 2 வர மிளகாய்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- கறிவேப்பிலை
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
- முதலில் பாசிப்பருப்பை நன்கு ஓரிரு முறை கழுவி பின் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
- பின் இட்லி பாத்திரத்தில் துணி போட்டு ஊறிய பாசிப்பருப்பை நீர் வடித்து 10 நிமிடம் வேகவிடவேண்டும்.
- பத்து நிமிடத்தில் பாசிப்பருப்பு குழையாமல் நன்கு உதிரியாக மலர்ந்து வெந்து தயாராக இருக்கும்.
- பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து பெருங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து அடுப்பை அனைத்து இவற்றையும் இதனுடன் உப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றையும் சேர்த்து பாசிப்பருப்பில் சேர்த்துக் கொட்டிக் கிளறவேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான பயத்தம் பருப்பு சுண்டல் தயார்,

பயத்தம் பருப்பு சுண்டல்