உணவுகள், அன்னம் என்பது உடலுக்கும் ஊட்டமளிக்கும் அமிர்தம். அன்னமயகோசம் என்ற சூட்சும உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும் உணவு சீரான முறையில் செரிமானமாகி ஆற்றலாக மாறி உறுப்புகளையும் நமது உடலையும் சீராக இயங்க துணைபுரிகிறது. இந்த உணவு தவறாகும் பொழுதும், சேரக்கூடாத உணவுகளை சேர்த்து உண்டாலும், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதோடு பல நேரங்களில் நஞ்சாகவும் மாறும். அதனால் உணவை தேர்ந்தெடுத்து உண்பது கண்ணுக்கு தெரியாத நமது ஆற்றலையும், நமது உடலையும் பாதுகாக்க உதவும். சேரக்கூடாத உணவை சேர்க்காமல் உண்பதே நமது உடலுக்கும் உயிருக்கும் நாம் கொடுக்கும் முதல் மரியாதை.
உண்டால் என்னவாகும் என விதண்டாவாதமாகவும் பலர், அறியாமலும் சிலர் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவதை இன்று நாம் பார்க்கலாம். வயிறு உப்புசம், அஜீரணம் என பல தொந்தரவுகளை வெளிப்படையாக பார்க்கலாம் என்றாலும் தொடர்ந்து இந்த தவறை செய்வதால் வெளிப்படையாக இந்த தொந்தரவுகளை அறியமுடியாது. காலப்போக்கில் உறுப்புகளில் பாதிப்பு, உயிர்கொல்லி நோய் என அவை மாற்றமடைந்து வேறு ரூபத்தில் வெளிவரும் என்பதை மறந்து விட முடியாது.. வெளிவரும்பொழுது காரணம் தெரியாத நோயாக அவை வெளிவரும் என்பதை மறுக்கவும் முடியாது, மறக்கவும் கூடாது. நம் முன்னோர்களில் வாக்கு தவறாகாது…
- பழங்களை சமைத்த உணவுடன் சேர்த்து உண்ணக் கூடாது.
- கீரைகளை இரவில் உண்ணக்கூடாது.
- கீரையுடன் அசைவ உணவு, பால், தயிர் சேர்த்து உண்ணக்கூடாது.
- முள்ளங்கியுடன் உளுந்து சேர்த்து உண்ண அது நஞ்சாகும்.
- கோதுமையுடன் நல்லெண்ணெய் சேர்த்து உண்ணக் கூடாது.
- வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடன் தயிர் மோர் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
- தயிர் மாமிசமும் சேர கூடாத உணவுகள்.
- நெய்யும் தேனும் சம அளவு கலந்து சாப்பிட அது நஞ்சாக மாறும்.
- வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து உண்ணக் கூடாது.
- மாதவிலக்கான நாட்களில் பெண்கள் கத்திரிக்காய், பப்பாளி, எள், அன்னாசி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.
- வெண்கலப் பாத்திரத்தில் நெய்யை வைத்து உபயோகிக்க கூடாது.
- வாத நோய்கள், மூட்டுவலி அசைவ உணவு, முட்டை, கிழங்கு வகைகளை சேர்த்து உண்ணக்கூடாது.
- மீன், கருவாடு போன்றவற்றுடன் தயிர், பால் சேர்த்து உண்ணக் கூடாது.
- பால் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது.
- தயிரை சூடுபடுத்தி அல்லது சூடான உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
- பால் எலுமிச்சை சேர்த்து சாப்பிடக்கூடாது.
- மீன், முள்ளங்கியை சேர்த்து உண்ணக் கூடாது.
மேலும் Wrong Food Combinations in Tamil