சேரக்கூடாத உணவுகளை நஞ்சாகும் உணவுகள் / எதிர் உணவுகள் என்று கூட சொல்லலாம். பொதுவாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும் பல நேரங்களில் சரியான சேர்மானம் இல்லையானால் சாப்பிடக்கூடிய உணவு நஞ்சாகவும், தீமை விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளது. நமது முன்னோர்கள் மிக கவனமாக உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதுடன் அவற்றின் தன்மையைப் பொருத்தும் உணவுகளை சேர்த்து பிரித்து உண்டனர். இன்றோ சுவைக்கு அடிமைப்பட்டு சேரக்கூடாத உணவுகளையும் சேர்த்து உண்ணும் நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இரத்தம் கெட்டுப்போவதும், அஜீரணம், வாயுத்தொல்லை, புளித்த ஏப்பம், துர்நாற்றம், மலச்சிக்கல், மூட்டுவலி, கல்லீரல் பதிப்புகள், சிறுநீரக கல் என பல பல உபாதைகளும் நோய்களும் மெல்ல மெல்ல உருவாகிறது. இவ்வாறான எதிர் உணவுகள் எவை என இந்த காணொளியை முழுவதும் பார்க்க தெரிந்துக்கொள்ளலாம். ஆரோக்கியம் பெருகும்.