கீரைகளை யார் தவிர்க்க வேண்டும்?

உடலுக்கு சிறந்த ஊட்டத்தையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும் சிறந்த உணவு கீரைகள். ஆனால் கீரைகளை எல்லாரும் எல்லா காலங்களிலும் உண்ணலாமா? என்றால் கிடையாது. சில நோய்கள் உள்ளவர்கள் கீரைகளை தவிர்ப்பதும், அதற்கேற்ற கீரைகளையே உண்பதும் அவசியமானது. அதனால் கீரைகளை உண்பதை சில சூழ்நிலைகளில் தவிர்ப்பது அவசியம்.

  • காய்ச்சல், வயிற்றுவலி, ஜனனி காய்ச்சல், வாந்தி, பேதி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது கீரைகளை சாப்பிடக் கூடாது.
  • அனைவருமே ஒரே கீரையை தொடர்ந்து உண்ணக்கூடாது. ஏதேனும் நோயால் பாதிக்கப் பட்டிருந்தால் அந்த நோய்க்கான கீரையை அந்த நோய் தீரும் வரை மட்டும் தொடர்ந்து குறைந்த காலத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
  • ஆஸ்துமா, சில சிறுநீரக நோய்கள், உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது கீரை உணவைத் தவிர்ப்பது நல்லது.
  • இரசாயனங்கள், பூச்சி கொல்லிகள் தெளிக்கப்பட்ட கீரைகளை அனைவருமே தவிர்ப்பது சிறந்தது.
  • அனைவருமே கோடைகாலத்தில் உடலுக்கு உஷ்ணம் அளிக்கும் கீரைகளை தவிர்க்க வேண்டும்.
  • அதேப்போல் அனைவருமே மழை, பனிக்காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கீரைகளை தவிர்க்க வேண்டும்.
  • வாத, பித்த, கப உடல் கொண்டவர்கள் அதற்கேற்ற அதாவது வாதத்திற்கு ஏற்ற கீரைகள், பித்தத்திற்கு ஏற்ற கீரைகள், சீதள உடலுக்கு ஏற்ற கீரைகளை மட்டுமே உண்ண வேண்டும்.
(1 vote)