வெள்ளை காய்கறி குருமா
செட்டிநாடு உணவுகளில் காலை, இரவு பலகாரம் மற்றும் இடைப் பலகாரத்தில் வரும் அடை உட்பட இட்லி, தோசை, இடியப்பம், சப்பாத்தி, ரொட்டி என அனைத்து உணவுகளுடனும் நன்கு பொருந்தும் தொட்டுக்கை இந்த செட்டிநாடு வெள்ளை குருமா.
எந்த மசாலா பொருட்களையும் அதிகமாகவும் சேர்க்காமல் நிறம் மாறாமல் பக்குவமாக தயாரிப்பது இதன் சுவையை அதிகப்படுத்தும்.
தேவையான பொருட்கள்
- 1 நீளமாக நறுக்கிய வெங்காயம்
- 1 கப் காய்கறி கலவை பீன்ஸ், பட்டாணி, கேரட், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு
- உப்பு
மசாலாவுக்கு அரைக்க தேவையான பொருட்கள்
- 2 துண்டு தேங்காய்
- 2 ஸ்பூன் தனியா
- 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் கசகசா
- 1 ஸ்பூன் பெருஞ்சீரகம்
- ஒரு சிறு துண்டு இலவங்கப்பட்டை
- 1 ஏலக்காய்
- சிறிது கல்பாசி
- 1 கிராம்பு
- 1 வெங்காயம் (சிறிய அளவு)
- 5 பச்சை மிளகாய்
- சிறிய துண்டு இஞ்சி
- 3 பல் பூண்டு
- 5 முந்திரி விரும்பினால் சேர்க்கலாம் சுவையை அதிகரிக்கும்
தாளிக்க
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் நெய்
- 2 சிறிய துண்டு இலவங்கப்பட்டை
- 2 ஏலக்காய்
- 2 கிராம்பு
செய்முறை
- அனைத்து காய்கறிகளையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- சம அளவாகவும் நறுக்கிகே கொள்ள வேண்டும். காய்கறிகள் மொத்தமாக சேர்த்து ஒரு கப் அளவு மட்டும் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒன்றரை கப்பிற்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- மசாலாவுக்கு அரைக்க என குறிப்பிட்டிருக்கும் பகுதியில் இருக்கும் பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மண் பானை அல்லது வாணலியை சூடேற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் கலந்து தாளிக்க என குறிப்பிட்டிருக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்கவும். துண்டு இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
- இவை பொரிந்த பிறகு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு மற்ற அனைத்து காய்கறிகளையும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பாதி வெந்த பட்டாணி மற்றும் காலிஃபிளவர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால் அவற்றை பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்.
- காய்கறிகளை சற்று வதக்கியப்பின் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக 3 நிமிடங்கள் வதக்கவும்.
- இவற்றுடன் 2 – 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வாணலியை மூடி, மிதமான தீயில் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வேகவைக்கவேண்டும்.. இடையில் காலிஃபிளவர் மற்றும் சமைத்த பட்டாணியை சேர்க்கவும்.
- முந்திரி, பொட்டுகடலை மற்றும் கசகசா ஆகியவை இந்த வெள்ளைக் குருமாவை ஆறியபின் கெட்டியாகும், அதனால் அதற்கேற்பதண்ணீரின் அளவை கூட்டிக் கொள்ளலாம்.
- ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குப் பின் காய்கறிகள் நன்கு வெந்ததை சரிபார்த்து அடுப்பை அணைக்கவும்.
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கலாம். புளிப்பு சுவை தேவைபட்டதென்றால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
- அவ்வளவுதான் சுவையான வெள்ளை குருமா தயார்.
வெள்ளை குருமா / செட்டிநாடு வெள்ளைக் குருமா / White Kurma
செட்டிநாடு உணவுகளில் மிக பிரபலமான காலை, இரவு பலகாரம் மற்றும் இடைப் பலகாரத்தில் வரும் அடை உட்பட இட்லி, தோசை, இடியப்பம், சப்பாத்தி, ரொட்டி என அனைத்து உணவுகளுடனும் நன்கு பொருந்தும் தொட்டுக்கை இந்த செட்டிநாடு வெள்ளை குருமா. எந்த மசாலா பொருட்களையும் அதிகமாகவும் சேர்க்காமல் நிறம் மாறாமல் பக்குவமாக தயாரிப்பது இதன் சுவையை அதிகப்படுத்தும்,
தேவையான பொருட்கள்
- 1 நீளமாக நறுக்கிய வெங்காயம்
- 1 கப் காய்கறி கலவை (பீன்ஸ், பட்டாணி, கேரட், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு)
- உப்பு
மசாலாவுக்கு அரைக்க தேவையான பொருட்கள்
- 2 துண்டு தேங்காய்
- 2 ஸ்பூன் தனியா
- 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் கசகசா
- 1 ஸ்பூன் பெருஞ்சீரகம்
- ஒரு சிறு துண்டு இலவங்கப்பட்டை
- 1 ஏலக்காய்
- சிறிது கல்பாசி
- 1 கிராம்பு
- 1 வெங்காயம் (சிறிய அளவு)
- 5 பச்சை மிளகாய்
- சிறிய துண்டு இஞ்சி
- 3 பல் பூண்டு
- 5 முந்திரி (விரும்பினால் சேர்க்கலாம் சுவையை அதிகரிக்கும்)
தாளிக்க
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் நெய்
- 2 சிறிய துண்டு இலவங்கப்பட்டை
- 2 ஏலக்காய்
- 2 கிராம்பு
செய்முறை
- அனைத்து காய்கறிகளையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- சம அளவாகவும் நறுக்கிகே கொள்ள வேண்டும். காய்கறிகள் மொத்தமாக சேர்த்து ஒரு கப் அளவு மட்டும் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒன்றரை கப்பிற்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- மசாலாவுக்கு அரைக்க என குறிப்பிட்டிருக்கும் பகுதியில் இருக்கும் பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மண் பானை அல்லது வாணலியை சூடேற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் கலந்து தாளிக்க என குறிப்பிட்டிருக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்கவும். துண்டு இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
- இவை பொரிந்த பிறகு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,
- பிறகு மற்ற அனைத்து காய்கறிகளையும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பாதி வெந்த பட்டாணி மற்றும் காலிஃபிளவர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால் அவற்றை பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்.
- காய்கறிகளை சற்று வதக்கியப்பின் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக 3 நிமிடங்கள் வதக்கவும்.
- இவற்றுடன் 2 – 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வாணலியை மூடி, மிதமான தீயில் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வேகவைக்கவேண்டும்.. இடையில் காலிஃபிளவர் மற்றும் சமைத்த பட்டாணியை சேர்க்கவும்.
- முந்திரி, பொட்டுகடலை மற்றும் கசகசா ஆகியவை இந்த வெள்ளைக் குருமாவை ஆறியபின் கெட்டியாகும், அதனால் அதற்கேற்பதண்ணீரின் அளவை கூட்டிக் கொள்ளலாம்.
- ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குப் பின் காய்கறிகள் நன்கு வெந்ததை சரிபார்த்து அடுப்பை அணைக்கவும்.
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கலாம். புளிப்பு சுவை தேவைபட்டதென்றால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
- அவ்வளவுதான் சுவையான வெள்ளை குருமா தயார்.
குறிப்புகள்
மசாலா அரைக்கும் போது அதிகப்படியான பொருட்களை சேர்க்காமல் மிதமாக பொருட்களை சேர்க்க சுவையும் மணமும் அதிகமாக இருக்கும். அதேபோல் காய்கறிகளையும்அளவாக சேர்க்கவேண்டும். ஆறியபின் குர்மா கெட்டியாகும் அதனால் நீரின் அளவை கொதிக்கும் பொழுதே பார்த்து சேர்த்துக் கொள்ளவேண்டும்.
மசாலா பொருட்களை அரைப்பதற்கு முன் எண்ணெயில் லேசாக வதக்கி சேர்க்க சுவை அதிகரிக்கும் (அதிகமாக வறுபட கூடாது).
will try
ok