நாற்பது ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் இன்று இளைஞர்களுக்கும் வரக்கூடிய மிக முக்கியமான ஒரு தொந்தரவு முடி உதிர்தலும் இளநரையும். அதிக தலை சூடு, உடல் உஷ்ணம், வைட்டமின் சத்து குறைபாடு, மன உளைச்சல், சோர்வு, சத்தற்ற உணவுகள் என பல காரணங்களால் வரக்கூடியது இளநரை. இந்த நரையை போக்குவதற்கான சில எளிய வீட்டு குறிப்புகளையும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.
நரைமுடி, இளநரை நீங்க
அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் நெல்லிக்காயை உணவுடன் சேர்த்துக் கொள்வது நரைமுடி வருவதையும், இளநரையையும் தடுக்கும். நெல்லிக்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் முடி உதிர்வது குறைவது மட்டுமல்லாமல் கூந்தல் கருகருவென வளரும். ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இது பொருந்தும். நெல்லிக்காயை வற்றலாக தயாரித்து வைத்துக் கொண்டு வருடம் முழுவதும் உண்டு வரலாம் அல்லது நெல்லிக்காய் ஊறுகாய் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். அதேப்போல் தேன் நெல்லிக்காயை அன்றாடம் ஒன்று என்ற அளவில் சாப்பிட்டு வர இளநரை நீங்கும்.
கற்றாழை
கற்றாழை சாறு, நெல்லிக்காய் சாறு ஆகியவற்றைக் கொண்டு தேங்காய் எண்ணெயில் தைலமாக தயாரித்து வைத்துக் கொண்டு அன்றாடம் இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வருவதால் கூந்தல் கருகருவென வளரும்.
கரிசாலை
இளங் கரிசாலை இலைகள் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. இளங் கரிசாலை இலைகளை காயவைத்து பொடித்து அன்றாடம் தேன் கலந்து உண்பதால் என்றும் இளமையுடன் இருக்கலாம். இளநரை மறையும்.
மூக்கிரட்டை
உடலின் ராஜா உறுப்புகளுக்கு பலமளிக்கும் ஒரு அற்புதமான மூலிகை மூக்கிரட்டை. இதனை பாலில் கலந்து நன்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருப்பதுடன் இளநரை நீங்கும்.
முளைக்கீரை
வாரம் ஒரு முறையேனும் முளைக்கீரையை தவறாமல் உணவுடன் சேர்த்து உண்டுவர இளமையை பேணிப் பாதுகாக்க முடியும், கூந்தல் வளர்ச்சி சீராகும்.
நல்லெண்ணெய் தைலம்
நரைமுடி நீங்க பால், எலுமிச்சை சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு ஆகியவற்றை நல்லெண்ணெயில் கலந்து தைலமாக தயாரித்து வைத்துக் கொண்டு அன்றாடம் தலைக்கு தடவி வர ஆறு மாதத்தில் நல்ல ஒரு பலனை எதிர்பார்க்க முடியும்.
பீர்க்கன் தைலம்
பீர்க்கங்காயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தைலமாக தயாரித்து அன்றாடம் பயன்படுத்த இளநரை மறையும்.