தூள் உப்பு
கடலில் இருந்து கிடைக்கும் உப்பை எடுத்து அதன் தாதுக்களை கூட்டி குறைத்தும், உப்பு வெண்மை நிறமாகவும் கட்டிப்படாமாலும் இருக்க சில இரசாயனங்களை சேர்த்து தூளாக்கப்பட்ட உப்பு இந்த வெண்மை உப்பு தூள் உப்பு. இந்த ரசாயனங்கள் மற்றும் பக்குவப்படுத்தப்பட்ட முறையினால் சில உடல் உபாதைகள் ஏற்படலாம்.
கல் உப்பு
கடலில் இருந்து கிடைக்கும் உப்பை எந்த விதத்திலும் பக்குவப்படுத்தாமல் அரசாங்கம் நிர்ணயித்துள்ள அளவு அயோடின் தாதுவை கலந்து உப்பின் இயற்கையான நிறம், சுவை, சத்துக்களுடன் கிடைக்கும் உப்பு கல் உப்பு. அன்றாடம் பயன்படுத்த சிறந்த உப்பு.
இந்துப்பு
ஹிமாலய மலை பகுதிகளில் பல ஆண்டுகாலமாக பாறைகளாக இறுகி இருக்கும் உப்பு பாறைகளே இந்துப்பு. மருத்துவத்திற்கு அதிகம் பயன்படும் ஒன்று. மருந்து உப்பு என்று கூட சொல்லலாம். குறைந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
அன்றாடம் சமையலுக்கு உகந்த உப்பு சாதாரண கடல் கல் உப்பு.
உப்பை சுத்தி செய்து பயன்படுத்த உப்பினால் வரும் உடல் தொந்தரவுகள் நீங்கும்.
உப்பு சுத்தி செய்யும் முறை
குறைந்த விலையில் கடைகளில் கிடைக்கும் கல் உப்பை வாங்கி அதனை ஒரு இரும்பு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். தேவைபட்டால் முருங்கை கீரை, கறிவேப்பிலை போன்ற ஏதேனும் ஒரு மூலிகையை சேர்த்துக் கொள்ளலாம்.
உப்பு நன்கு சூடானதும் படபடவென வெடிக்க தொடங்கும். இவ்வாறு வறுத்த உப்பை தேவைபட்டால் தூளாக்கி அன்றாடம் பயன்படுத்தலாம். இந்த உப்பினால் எந்த தீங்கும் ஏற்படாது, உப்பினால் ஏற்படும் பல நோய்கள் அகலும்.