எந்த எண்ணெய் எதற்கு பயன்படுத்தலாம்

எல்லா எண்ணெயையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்று பெரிதும் விற்கப்படும் சமையல் எண்ணெய் சத்துக்கள் அற்ற எண்ணெய் ஆகும். அதனால் அவற்றை தவிர்த்து நமது கிராமங்களில் விளைவிக்கப்படும் எண்ணெய் வித்துக்களைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெயை பயன்படுத்த உடல் ஆரோக்கியம் மேம்படும். சருமம் பளபளக்கும்.

நமது கிராமங்களில் கிடைக்கும் கடலை, எள், ஆமணக்கு, இலுப்பை, தேங்காய் ஆகியவற்றின் எண்ணெய் சமையலுக்கு சிறந்தவையாகும். எந்த எண்ணெயை என்ன உணவுகள் தயாரிக்க பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

இலுப்ப எண்ணெய்

இலுப்ப எண்ணெயில் பலகாரங்கள், துவையல் செய்தால் சுவை கூடும். நமது முன்னோர்கள் இலுப்பை எண்ணெயில் முறுக்கு, தட்டை போன்ற பலகாரங்களை நல்ல மணமாகவும், சுவையாகவும் தயாரித்து சுவைத்ததற்கு இலுப்பை எண்ணெய் ஒரு மிக முக்கிய காரணம்.

கடலை, நல்ல எண்ணெய்

பொரிப்பதற்கு, குழம்பு வைக்க கடலை, நல்ல எண்ணெய் சிறந்தது. அன்றாடம் தயாரிக்கப்படும் தமிழக உணவுகள் அனைத்தையும் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்க சுவையாக இருக்கும். உடல் பருமனை குறைக்க நல்லெண்ணெய் அதிகம் பயன்படும் மேலும் உடலுக்கு தேவையான பல தாது சத்துக்களையும் எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் அளிக்கும். எண்ணெய் கொப்பளித்தளுக்கு (oil pulling) நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.

விளக்கெண்ணை

பருப்பு வேகவைக்க விளக்கெண்ணெயை பயன்படுத்த சுவையையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். பருப்பில் இருக்கும் கெட்ட வாயுக்களை நீக்கவும் இது பயன்படும். ஆமணக்கிலிருந்து கிடைக்கப்படும் எண்ணெய் இந்த விளக்கெண்ணை என்பது குறிப்பிடத்தக்கது. உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, மலச்சிக்கல் இல்லாமல் இருக்க உதவும்.

தேங்காய் எண்ணெய்

பொரிக்காமல் அதிகம் சூடேற்றாமல் செய்யக்கூடிய உணவுகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது. கூந்த வளர்ச்சி, சரும பளபளப்பு, புண்கள், காயங்களுக்கும் சிறந்த மருந்தாக இந்த தேங்காய் எண்ணெய் உள்ளது. எண்ணெய் கொப்பளித்தளுக்கு (oil pulling) பயன்படுத்தலாம்.

எண்ணெய் உடலுக்கு அவசியமானதே.. சரியான முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய்யை தேர்ந்தெடுத்து உபயோகிப்பதால் பல உடல் உபாதைகள், நோய்கள் ஏற்படுவதிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.