மர செக்கு எண்ணெய் என்றால் என்ன?

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை, தேங்காய், எள்ளு, வேப்பங்கொட்டை) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். செக்கின் அடிமரம் பொதுவாக புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் மாடுகள் இதனை இயக்க பயன்படுத்தினர். தற்போது குறைந்த மின்சாரம் அல்லது எரிபொருள் மூலம் இயக்கப்படுகிறது. பழைய கிரெண்டர் போல அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துக்களிலிருந்து வரும் எண்ணெய் வெளியேறும்படியாக உபகரணங்களைப் பொருத்தி இருக்கும்.

செக்கில் நல்ல எண்ணெய் ஆட்டுவதற்கு எள்ளை சுத்தம் செய்து எள் அதனுடன் லேசான வெப்பத்தையும் தணிக்க கருப்பட்டி அல்லது நாட்டுச்சக்கரை சேர்த்து ஆட்டுவது வழக்கம். சிறிதுசிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும். மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது மரச்செக்கில் அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இதனால் இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்ணெய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருப்பது இயற்கை.

இவ்வாறு ஆட்டப்படும் எண்ணெயின் மணம், மருத்துவ குணம், சுவைக்கு தனி வரவேற்பு உண்டு. மர செக்கு எண்ணெய், பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாகவே இருக்கும். ஆனால், நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்கு கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மர செக்கு எண்ணெயை சாப்பிட்டால்… அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது. இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

குழம்பு, வறுவல், பொரியல், முறுக்கு, அதிரசம், வடை என்று எல்லா விதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் தயாரிக்கலாம்.

மரசெக்கு எண்ணெய்களை இந்த இணைப்பிலிருந்து பெறலாம்
மரசெக்கு நல்லெண்ணெய்
மரசெக்கு கடலைஎண்ணெய்
செக்கு தேங்காய் எண்ணெய்