விளைநிலங்களில் சிறந்த பயிர் வளர்ச்சியை மேற்கொள்வதற்கு எளிய இந்த சில களை மேலாண்மை முறைகளை பின்பற்றினாலே போதும். களையை கட்டுப்படுத்தி நல்ல மகசூலை பெறலாம்.
உழவில் செய்யக்கூடிய வழிமுறைகள் – களை மேலாண்மை
- கோடை உழவு பெரும்பான்மையான களையை கட்டுப்படுத்தும்.
- களைகள் பூப்பதை அனுமதிக்கக் கூடாது.
- பயிர்களை தேர்ந்தெடுத்து பயிரிடவேண்டும்.
- சூரியஒளி மண்ணில் படாதவாறு பயிர்களை தேர்ந்தெடுத்து அடுக்கடுக்காக பயிரிடலாம்.
- மூடாக்கிடுவது சிறந்தது
- கால்வாய்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- பயிர் சுழற்சி அவைசியமனது. பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்து பயிரிடும் முறையாகும். இவற்றை மேற்கொள்வதால் சிறந்த விளைச்சலைப் பெறமுடியும். ஒரே பயிரை பயிரிடுவதால் களைச் செடிகளின் ஆதிக்கம் அதிகமாகும்.