உணவு உட்கொள்ள சில முறைகள்

  • ‘பசித்துப் புசி’, பசி நன்றாக வந்த பின்னரே உணவை உண்ண வேண்டும். பசி இல்லையென்றால் உணவை உட்கொள்ள கூடாது, உண்டால் ருசிக்காது, பின்னர் பசிக்காது.
  • உண்ணும் பொழுது தரையில் அமர்ந்து உணவை உட்கொள்ள வேண்டும்.
  • கவலையிலும் துக்கத்திலும் உணவை உண்ணக் கூடாது.
  • தூக்கம் இருக்கும் போது உணவை உண்ணக் கூடாது. உடலால் உணவு செரிமானம் ஆகாது. அதிக களைப்புடன் இருக்கும் பொழுதும் உண்ணக் கூடாது. அப்பொழுது தேவையானது சிறிது ஓய்வும், உறக்கமும் தான்.
  • ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’, நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து ருசித்து, ருசியை அனுபவித்துக் உண்ண வேண்டும்.
  • பழைய உணவுகளை சுட வைத்து உண்பது உடலுக்கு கேடு ஏற்படுத்தும்.
  • பழைய உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  • அதிக சூடான உணவையும் அதிகம் குளிர்ந்த உணவையும் தவிர்க்க வேண்டும்.
  • சமைத்த உணவை இரண்டு மூன்று மணி நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
  • கெட்டுபோன உணவை உண்டால் உடல்நலம் பாதிக்கப்படும்.
  • அதிக உணவு உள்ளதே என்பதற்காக உண்ணக்கூடாது.
(1 vote)