தர்பூசணி சாறு / Water Melon Juice

தர்பூசணி சாறு உடலுக்கு தேவையான நீர்சத்துக்களையும் பிராண சத்துக்களையும் அளிக்கும் சிறந்த பானம். சிறுநீர் கோளாறுகளை அகற்றும், உடலுக்கு நல்லது. பசியின்மை, அஜீரணம் இவற்றிற்கு நல்ல மருந்தாகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக் கூடியது. கோடைகாலத்திற்கு சிறந்தது. உடல் உஷ்ணத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் விதை நீக்கிய தர்பூசணி துண்டுகள்
  • ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • தேவையான அளவு தேன்

செய்முறை

  • தர்பூசணி விதைகளை நீக்கிய துண்டுகளை நன்கு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • தர்பூசணி தோல் பகுதியில் இருக்கும் வெள்ளை சதை பகுதியை ஒரு ஸ்பூனால் எடுத்து அதனை மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • அரைத்தவற்றை தர்பூசணி சாறுடன் சேர்த்து கலந்துக் கொள்ளவேண்டும்.
  • இதனுடன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகலாம்.
  • உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்கக் கூடிய ஜூஸ்.
  • இந்த ஜூஸ் அரைக்க தண்ணீர் சேர்க்கக் கூடாது. தர்பூசணியில் இருக்கும் தண்ணீரே போதுமானது. தண்ணீர் சேர்ப்பதால் செரிமானமின்மை ஏற்படும்.

தர்பூசணி சாறு

தர்பூசணி சாறு உடலுக்கு தேவையான நீர்சத்துக்களையும் பிராண சத்துக்களையும் அளிக்கும் சிறந்த பானம். சிறுநீர் கோளாறுகளை அகற்றும், உடலுக்கு நல்லது. பசியின்மை, அஜீரணம் இவற்றிற்கு நல்ல மருந்தாகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக் கூடியது. குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
Drinks
Indian
juice recipe
ஆயத்த நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 5 minutes