குளங்கள், ஏரிகளில் தாமரையையோ அல்லிமலரையோ அதிகம் நம் தமிழகத்தில் பார்க்க முடியும். அல்லியில் பொதுவாக வெள்ளை நிற பூக்கள், சிவப்பு நிற பூக்களை நாம் பார்க்கலாம். நீரில் பூக்கும் அல்லியின் பூக்களுக்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. உடலில் ஏற்படும் சில தொந்தரவுகளுக்கு எவ்வாறு இந்த அல்லி மலர் நமக்கு பயனளிக்கிறது என பார்க்கலாம்.
அல்லி பூவின் குணம்
மேக நோய்களையும், மேக புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது அல்லிப்பூ. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் அபார ஆற்றல் கொண்ட மலர். தாக வேட்கையைத் தணித்து, உடல் வெப்பத்தை நீக்கி, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் மலர் அல்லி மலர்.
உஷ்ண நோய்களுக்கு
வெள்ளை அல்லது சிவப்பு நிற அல்லிப் பூக்களை சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு செந்தூரம் சேர்த்து இருபது நாட்கள் தொடர்ந்து உண்டு வர உஷ்ணம் தொடர்பான அனைத்து நோய்களும் மட்டுப்படும்.
நீரிழிவு கட்டுப்பட
ஆவாரம் பூக்களை வெள்ளை அல்லி பூக்களுடன் சம அளவு சேர்த்து இனிப்பு சேர்த்து நீரில் இட்டு காய்ச்சி பாகாக்கி எடுத்து வைத்துக் கொண்டு பசும்பாலுடன் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை எடுத்துவர நீரிழிவு, சிறுநீர்த் தாரை நீங்கும். அதிக நீரிழிவு உள்ளவர்கள் ஒரு மண்டலம் எடுக்க விரைவில் பலன் கிடைக்கும்.