பிரபஞ்சத்தின் அற்புதப் படைப்பான மனித உடலில் முக்கால் பங்கு தண்ணீரே. நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படவும் நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கவும் தண்ணீர் இன்றியமையாததாகும்.
தூய்மையான தண்ணீர் பருகுவதனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் சீராக செல்வதோடு மெட்டபாலிசம் சீரமைக்கப்பட்டு உறுப்புகள் பாதுகாக்கப்படுகிறது. இதனால் நச்சுக்கள், வியர்வை வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்க உதவும்.
அதாவது நம் உடலில் உள்ள குழாய்கள் மற்றும் உறுப்புகளில் தேங்கி உள்ள நோய்களை உண்டுபண்ணும் இரசாயனக் கழிவுகள், திட திரவ கழிவுகள் மற்றும் தோளில் அடைந்திருக்கும் கழிவுகளை தூய்மையான தண்ணீரே வெளியேற்றுகிறது. இதனால் குடல் சுத்தமாகும்.
நச்சுக்களை நீக்கும் குடிநீர்
தண்ணீர் உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்கி சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலில் ஏற்படும் துர்நாற்றம் மறைகிறது.
தண்ணீரே உடல் நோய்களை விரட்டி உடலை புத்துணர்வுடனும் இரத்தத்தின் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் உயர்த்துகிறது. சாதாரண தூய இயற்கை தண்ணீரின் மூலம் மட்டுமே இது சாத்தியமாகிறது. தூய தண்ணீர் பல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஜீரோ கலோரி என்று சொல்லும் நீரானது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
குடிநீர்
தண்ணீர் தண்ணீர் – ‘காணுமிடமெல்லாம் தண்ணீர்’, என்று நம்மை சுற்றி சுற்றி தண்ணீர் இருந்தாலும் தாகம் என்ற உணர்விற்கு ஏற்ற தண்ணீராக அவை உள்ளதா?
உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று. உடலின் தாகம் தீர்க்கும் தண்ணீர் என்பது இன்றைய விஞ்ஞானம் கூறும் TDS, Carbon என்ற தண்ணீரின் அளவு கோல் மட்டும் ஆகாது.
கடல் நீர்
சாதாரண கண்ணில் பார்க்க தண்ணீரை போல் உள்ள கடல் நீரை (சற்று உப்பு கூடுதலாக உள்ள நீர்) உட்கொள்ள உபாதைகள் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும் தாகம் தணியாது, குடிக்க முடியாது.. காரணம் அதன் சுவை உப்பாக இருப்பது. எப்படி கடல் நீர் உப்பு கரிக்கிறதோ அதைப்போலவே, இன்று செயற்கை சுத்திகரிப்பு என்ற பெயரில் வரும் நீர் அனைத்து உயிர் சத்தும் இழந்து சற்று கசப்பு சுவை பெற்று தாகத்தை தணிக்காத சப்பை தண்ணீராக உள்ளது.
கடல் நீரைக்குடிக்க எவ்வளவு தொந்தரவுகள் ஏற்படுமோ அவ்வளவும் இந்த செயற்கை நீரைப் பருகுவதனாலும் ஏற்படும். செயற்கையாக சுத்திகரிப்பு என்ற பெயரில் இன்று பல இரசாயனங்களையும், பூச்சிக்கொல்லிகளையும், சுவையூட்டிகளையும் தண்ணீரில் சேர்கின்றனர்.
பொதுவாக கிருமி என்று நம்மை பயமுறுத்தி இந்த சப்பை தண்ணீரையும் அதாவது mineral water என்று கூறி குடிக்கத் தூண்டுகின்றனர் பலர். இந்த செயற்கை தண்ணீரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்களும் அழிக்கபடுகிறது. அனைத்து மினரலும் நீக்கிய சக்கை தண்ணீரை மினரல் வாட்டர் என்று சொன்னாலும் வாங்கும் அவலம் தொடர்கிறது.
உண்மையான தண்ணீர் கிடைக்காத உடல் தாகம்.. தாகம்… என்று தொடந்துகொண்டே இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத உயிர் சத்தும் அழிக்கப்பட்ட இந்த தண்ணீரைப் பருகுவதனால் உடலின் தாகம் என்ற வேட்கை குறையாது அதிகரித்துகொண்டே போகிறது.
பிளாஸ்டிக் பாட்டி குடிநீர்
அதுமட்டுமா இன்று இந்த தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்படுவதினால் ஏற்படும் பதிப்புகள் இன்னும் அதிகம். ஆன்டிமோனி, Bisphenol A போன்ற வேதியல் மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் நம் சந்ததியினரையே வேரோடு அழிக்கிறது.
இன்னும் கொடுமை காரில் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்து பல நாட்களுக்கு குடிப்பது. வெயிலும், வெப்பமும் ஊடுருவ பிளஸ்டிக்குடன் வெந்த செயற்கை தண்ணீர் நம் மரபணுவையே உருகுலையச் செய்கிறது.
RO செய்யப்பட்ட தண்ணீரில் எந்த மினரல்சும் இல்லாமல் சக்கை தண்ணீராக மாறுகிறது. உடலுக்கு தண்ணீரின் மூலம் கிடைக்கக் கூடிய குறைந்த அளவான இயற்கை தாது உப்பு (கால்சியம், பொட்டாசி யம், மக்னீசியம்) மற்றும் பல சத்துக்கள் அறவே இல்லாமல் போகிறது.
இவை அனைத்தும் தண்ணீர் தான் என்றாலும் தாகம் என்ற உணர்வை எதுவும் தீர்ப்பதில்லை. இந்த செயற்கை தண்ணீரின் இரசாயன சுவைக்கும் நாம் அடிமையாகி விட இயற்கையான தண்ணீர் கிடைக்கும் இடத்திற்கு போனாலும் செயற்கை தண்ணீரைக் குடிக்கும் அவலம் தொடர்கிறது.
செயற்கை நீர் தாகம் தணிக்குமா?
தாகம் தணியாது செயற்கை தண்ணீரை தொடந்து குடிப்பதினால் உடல் பருமன், நாவறட்சி, தோல் நோய் முதல் மன அழுத்தம், புற்று நோய் வரை பல நோய்கள் நம்மருகிலேயே நிழலாக நம்மை தொடர்கிறது.
பல விதங்களில் இயற்கையை நாம் அழித்தாலும், இயற்கை என்றும் நமக்காக தன் கருணையை பொழிந்துகொண்டே இருக்கிறது. நமக்கு சுத்தமான தூய்மையான நல்ல அற்றலைக்கொடுக்கக் கூடிய தண்ணீரை உற்பத்தி செய்ய இந்த பிரபஞ்சம் ஏற்படுத்திய தொழில்நுட்பம் இலவசம் என்பதாலோ என்னமோ அதனை நாம் மதிப்பதில்லை.
இயற்கை தொழில்நுட்பம்
இயற்கை ஏற்படுத்திய தொழில்நுட்பமா? அது என்ன என்கிறீர்களா? ஆயிரம் RO, UV, Filtration என எல்லாமும் இயற்கையாக ஒரு செலவும் இல்லாமல் ஒரு சேர்ந்தது.
உலகில் உள்ள முன்றில் இரண்டு பங்கான கடல் நீரினை உறிஞ்சி மேகமாக மாற்றி மழை நீராக பொழிந்து அவற்றை நிலத்தடியில் சீராக வடிகட்டி, சேமித்து வைக்கிறது. அதுமட்டுமா ஆறுகள், அருவிகள், மலைகள், குளங்கள், ஏரிகள் மூலம் தண்ணீரை நமக்காக சுத்திகரித்தும் கொடுக்கிறது.
நோய் தீர்க்கும் தண்ணீர்
இன்று நமக்கு கிடைக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லை என்று எண்ணுபவர்கள் இயற்கை முறையில் தண்ணீரை சுத்திகரித்து தேவைக்கு, தாகம் தனிய பருக எல்லா நோய்களும் எளிதாக விலகி விடும். இயற்கை தண்ணீரை தவிர வேறு ஒன்றும் உடல் கழிவை எளிதாக வெளியேற்றவும் முடியாது, ஆரோக்கியத்தை கொடுக்கவும் முடியாது. இயற்கையான தண்ணீர் என்பது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம், அடர்த்தி, சுவையில் மாறுபடும். முழு கவனத்துடன் பருக நாக்கு நல்ல பிராண சத்து மிக்க தண்ணீரை இனம்காணும். தாகமும் தீரும், மனம், உடல் அமைதியும் உற்சாகமும் பெரும்.