வேஸ்ட் டீகம்போஸர் கரைசல்

மண்ணிற்கு ஊட்டம் அளிக்கும் ‘வேஸ்ட் டீகம்போஸர்’ எனும் இடுபொருளை இந்தியா வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தாவர கழிவுகளை மட்க வைக்கவும், மண்ணில் நுண்ணுயிர்களை பெருக்கவும் ‘வேஸ்ட் டீகம்போஸர்’ இடுபொருள் பெருமளவில் பயன்படும் ஒன்று.

தேவையான பொருட்கள்

வெல்லம் – 2 கிலோ
வேஸ்ட் டீகம்போஸர் – 1 பாட்டில்
தண்ணீர் – 200 லிட்டர்

தயரிக்கும் முறை

முதலில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் ஒன்றை எடுத்து தயாராக நிழற்பாங்கான இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதில் 200 லிட்டர் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனில் வெல்லத்தையும், திட நிலையில் இருக்கும் வேஸ்ட் டீகம்போஸரையும் சேர்த்து நன்கு கரைத்து கலந்து விடவேண்டும். இந்த கரைசலை ஏழு நாட்களுக்கு காலை மாலை என இரண்டு வேலை கலக்கி விடவும்.

இதன் மூலம் 200 லிட்டர் வேஸ்ட் டீகம்போஸர் கரைசலை தயாரிக்க முடியும். தயாரித்தப் பின் இந்த கரைசலை ஒரு மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை

பிறகு ஏழு நாட்களுக்கு ஒரு முறை 7 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் டீகம்போஸர் கலந்து காய்கறி பயிர்களுக்கும் மற்ற பயிர்களுக்கும் பயிர் தெளிப்பான் மூலம் அல்லது பாசனதுடனும் தெளிக்கலாம். 

பயன்கள்

இந்த வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் பயன்படுத்துவதால் பூ ஊதிர்வு, பூச்சி தாக்குதல், நோய் தாக்குதலையும் தவிர்க்கலாம்.

வீட்டுத் தோட்ட செடிகள், மாடித் தோட்ட செடிகள், காய்கறிகள், நெல், மரப்பயிர்கள், பழப்பயிர்கள் என அனைத்து விதமான பயிர்களுக்கும் இந்த வேஸ்ட் டீகம்போஸர் கரைசலை பயன்படுத்தலாம்.

மண்ணின் நுண்ணூட்ட சத்துக்களையும், பேரூட்ட சத்துக்களையும் அதிகரித்து, நுண்ணுயிர் பெருக்கத்தையும் அதிகரிக்க உதவும் கரைசல்.

இதனை கீழுக்க முகவரியில் தபால் மூலம் பெறலாம்

For more information, you can contact NCOF at

RCOF Bangalore - Regional Director Regional Centre of Organic Farming, Kannamangala Cross, Whitefield – Hosekote Road, Kadugodi Post, BENGALURU-560067 (Karnataka). 080-28450503 Email: [email protected], [email protected] Karnataka, Kerala, Tamilnadu, Pondicherry and Lakshdweep