மாதாமாதம் விரதத்திற்கு உகந்த நாட்கள் வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதமும் முப்பது நாளில் பதினைந்து நாட்கள் சிறந்த விரத நாட்களாக உள்ளது. யாருக்கு எந்த நாள் ஏதுவாக உள்ளதோ அவர்கள் அந்த நாளை எடுத்துக் கொண்டு மாதாமாதம் விரதம் கடைபிடிக்க நம் முன்னோர்கள் செய்த ஏற்பாடு இந்த விரதம்.
விரதம் என்றால் என்ன?
சாப்பிடாமல் உடலை துன்புறுத்தி எல்லா நாளும் விரதம் இருப்பது நாமே நமது உடலுக்கு செய்யும் பாவம். உடலை வருத்தாமல் உடல் நலனை காக்க மேற்கொண்ட முறையே விரதம்.
முன்னோர்கள் ஆன்மீகம் என்ற பெயரிலும், இறை வழிபாடு என்ற பெயரிலும் ஏற்பாடு செய்த ஒவ்வொரு நடைமுறையும், சம்பிரதாயங்களும் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், பிறப்பிற்கான பாதையில் வழி தவறாமல் பயணிக்கவும் தான். மாதம் ஒரு முறை உண்ணா நோன்பு, பட்டினி, நீர் மட்டும் அருந்துவது, பழச்சாறு மட்டும் அருந்துவது போன்ற வழிமுறைகளை உடல் மன ஆரோக்கியம் மேம்பட பின்பற்றப்பட நம் முன்னோர்களால் வகுத்தவை. அவற்றை மாதாமாதம் ஒரு நாள் என பின்பற்ற உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்கும், உடல் பருமன் நீங்கும், உடல் புத்துணர்ச்சி அடையும், மலச்சிக்கல் விலகும், கற்கள் கரையும், இரத்தம் சுத்தமாகும். மேலும் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலனை விரதம் என்ற பதிவில் பார்க்கலாம்.
இனி இந்த பதிவில் நம் முன்னோர்கள் இறைவழிபாட்டோடு விரதமிருப்பதால் ஏற்படும் பலன்களை கூறியுள்ளனர். அவற்றைப் பார்ப்போம். நம்மை சுற்றி சுழலும் சந்திரனைக் கொண்டு கடைபிடிக்கப்படும் விரத நாட்கள் உடலையும், மனதையும் செம்மைபடுத்த மிக முக்கியமானது.
விரதங்கள் | பலன்கள் |
---|---|
சங்கடஹர சதுர்த்தி | சங்கடங்கள் நீங்கும் |
விநாயகர் சதுர்த்தி | விக்னங்கள் நீங்கும் |
சிரவணம் (திருவோணம்) | குடும்ப ஒற்றுமை, ஆனந்தம் பெருகும் |
ஏகாதசி | செழிப்பு, ஆரோக்கியம் மேம்படும் |
வைகுண்ட ஏகாதசி | வறுமை நீங்கும். செல்வம் கொழிக்கும் |
சஷ்டி விரதம் | எண்ணியது கிட்டும். புண்ணியம் பலம் பெறும் |
கார்த்திகை | செல்வம், கல்வி, ஆயுள் நல்ல மனைவி மக்கட் பேறு கிடைக்கும். |
கௌரி விரதம் | மாங்கல்ய பாக்கியம் |
வரலெஷ்மி விரதம் | கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடையலாம். திருமணமானவர்களுக்கு தம்பதிகள் ஒற்றுமை உண்டாகும் |
பிரதோஷம் | மன அமைதியும், நீண்ட ஆயுளும் செல்வமும் கொழிக்கும் |
மகா சிவராத்திரி | சிவபெருமானின் அருளும். வாழ்வில் எல்லாவித நன்மைகளும் கிடைக்கும் |
வைகாசி விசாகம் | குழந்தைப் பேறு உண்டாகும் |
நவராத்திரி விரதம் | சகல சௌபாக்கியமும் உண்டாகும் |
கோகுலாஷ்டமி | மனநலம், நீண்ட ஆயுள், செல்வமும் உண்டாகும் |
அமாவாசை | பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்தது |
பௌர்ணமி | கஷ்டங்கள் விலகும் |