வில்வப் பழம்

வில்வ பழத்தை எவரும் விரும்பி உண்ண மாட்டார்கள். ஆனால் இதன் மருத்துவ குணம் அறிந்தவர்கள் இந்த வில்வப் பழத்தை இருக்கும் இடம் தேடி சென்று கொண்டு வந்து சாப்பிடுவார்கள். சித்த வைத்தியர்கள் இதிலிருந்து சூரணம், லேகியம் ஆகியவைகளை தயாரித்து நோயாளிகளுக்கு அளிப்பார்கள்.

பித்த சம்பந்தமான நோய்களை அகற்றும் சக்தி கொண்டது. வாய்புண், குடல் புண் போன்ற குறைபாடுகளை தீர்க்கும். இதனை பழமாக இல்லாமல் செங்காயாகக் கொண்டு வந்து புளி, இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து சாப்பிடும் போது உடலில் பற்றியுள்ள பலவிதமான நோய்களைத் தீர்க்கலாம்.

இதில் செய்யப்படும் வில்வாதி லேகியத்தை வாங்கி தினசரி காலை மாலை இரண்டு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு சூடான பால் குடித்து வந்தால் சயரோகம், ஆஸ்துமா போன்ற நோய்கள் நலமாகும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

பித்த உடல் வாகு கொண்டவர்கள் வில்வப் பழத்தின் ஓட்டை எடுத்து விட்டு சதைப் பகுதியை எடுத்து நாட்டு சர்க்கரை சேர்த்து விடியற்காலை வேளையில் சில நாட்கள் தொடர்ந்து உண்டு வந்தால் பித்தம், பித்த குறைபாடுகள் அறவே அகன்று விடும்.

(3 votes)