விளாம்பழம் பயன்கள்

விநாயகர் சதுர்த்தியன்று கணபதிக்கு படைக்கும் கனிகளில் மிக முக்கியமான பழம் விளாம்பழம். பல பல சத்துக்கள் நிறைந்த பழம். அதிகமாக வெளிநாடுகளுக்கும் இந்த விளாம்பழத்தில் தயாராகும் இனிப்பு ஹல்வா ஏற்றுமதியாகிறது.

வாய் கசப்பு, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தியெடுத்தல், பித்தக் கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை ஏற்பட்டுச் சில்லென்று போதல், பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசியற்ற நிலை, அளவுக்கு மீறிய உமிழநீர் சுரத்தல், தொண்டைப் புண், கல்லீரல் இயக்கம் சீர்குலைந்து அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிறந்த பழம் பலனை அளிக்கும் பழம் விளாம்பழம். இரும்பு சத்தை அதிகரிக்கும்.

தினசரி காலை உணவிற்குப் பின் நன்கு பழுத்த விளாம்பழத்தை உடைத்து உட்பகுதியை மட்டும் வெல்லம் சேர்த்து 21 நாட்கள் உண்டால் மேலே குறிப்பிட்ட தொந்தரவுகள் பூரண நீங்கும்.

விளாம்பழத்தை உண்பதால்

விளாம்பழத்தை அவ்வப்பொழுது உண்பதால் ரத்தத்தில் கலக்கும் நோய் கிருமிகள் அழியும். அதனால் உடலை நோய் தாக்காது. ரத்தம் சுத்தமாகும். அஜீரணக் கோளாறு அண்டாது. அறிவுத் தெளிவு ஏற்படும்.

நினைவாற்றலை அதிகரிக்கும்

சிறுவர்களுக்கு மிக சிறந்த பழம். பள்ளிப் பாடத்தை அடிக்கடி மறக்கும் சிறுவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கவும், எலும்புகள் உறுதியாகவும் விளாம்பழம் உதவும்.

புது இரத்தத்தை பெரியவர்களுக்கு அளிக்கும்

உடலுக்கு ஊட்டமளிக்கும் டானிக் இந்த விளாம்பழம். மூன்று நாள்களுக்கு ஒருமுறை கனிந்த விளாம்பழத்தை வெல்லம் சிறிது மிளகு, சீரகம் சேர்த்து உண்டால் எலும்புகள் பலம் பெறும். பற்கள் ஆட்டம் காணாது. புதிய ரத்தம் உற்பத்தியாகி நினைவாற்றல் அதிகரிக்கும். இதயத்துடிப்பு சீராகும். மனக்கலக்கம் மறைந்து மகிழ்வும், நடைமுறையில் தெம்பும் ஏற்படும்.

“விட்டதடி ஆசை விளாம்பழ ஓட்டோட” என்ற ஒரு பழமொழி விளம்பழத்திற்கு உண்டு. விளாம்பழ சதையையும், ஓட்டையும் சேர்த்து நாளுக்கு ஒரு பழம் வீதம் 21 நாட்கள் எடுக்க பெண் வசியத்தையும் தீய உணர்வையும் முறிக்கும் ஆற்றல் கொண்டது.