வெட்டிவேர் – நம் மூலிகை அறிவோம்

Vetiveria zizanioides; வெட்டிவேர்

பலருக்கும் தெரிந்த ஒரு மூலிகை வேர் இந்த வெட்டிவேர். பெரும்பாலும் பலர் சாதாரணமாக தண்ணீரில் இதனை முடிச்சாக கட்டி போட்டு பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். இவ்வாறு தயாரித்த தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. ஆனால் இதை தாண்டி பல நோய்களுக்கும் சிறந்த ஒரு மருந்து இந்த வெட்டிவேர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

வெடிவேரின் இலைகள் ஊசி போன்ற அமைப்புடன், நீள் வடிவத்தில் இருக்கக்கூடியது. இதன் வேர் பகுதி சல்லிவேர் தொகுப்பாக தண்டின் அடியில் இருந்து தோன்றக்கூடியது. தனி இலைகளையும் எதிர் இரு வரிசை மாற்றடுக்கத்தில் பெற்ற ஒரு புல் வகைத் தாவரம் இந்த வெட்டிவேர். இதில் வேர் பகுதியே பொதுவாக பயன்படுத்தக் கூடியது. குரு வேர், விரணம், இருவேலி, விழல் வேர், விலாமிச்சை என பல பெயர்களும் இதற்கு உண்டு

வெட்டிவேரின் சல்லிவேர் தொகுதியை உலர்த்திய பின் வெளிர் மஞ்சள் நிறமாக காணப்படும். இதுவே மருத்துவ குணத்தை கொண்டுள்ளது. இனிப்பு சுவையைக் கொண்டது இந்த வெட்டிவேர். நறுமண எண்ணெய், ரெசின், சாயப் பொருட்கள் மற்றும் Oxide of Iron போன்ற பலவிதமான வேதிப்பொருட்கள் இந்த வெட்டிவேரில் உள்ளது. வியர்வையை பெருக்கி கூடியதாகவும், ரத்தத்தை பெருக்க கூடியதாகவும் இது உள்ளது.

வெட்டிவேரின் மருத்துவம்

காமாலை, ரத்தசோகை, சிறுநீர்க் கட்டு, பித்த நோய்கள், தாது நஷ்டம், மயக்கம், வயிற்று மேகக் கட்டிகள், பைத்தியம், கழுத்து நோய், காய்ச்சல், தாகம், கண் நோய், தீயினால் ஏற்பட்ட புண் என பல நோய்களுக்கும் சிறந்த ஒரு மருந்தாகப் பயன்படக்கூடியது இந்த வெட்டிவேர்.

வெட்டிவேர் குடிநீர்

பொதுவாக நாம் அருந்தும் நீரில் இந்த வெட்டிவேரை போட்டு அன்றாடம் அந்த நீரை பருகுவதால் ஜீரண மண்டல நோய்கள், பித்தநோய் அகலும். மிக எளிமையாக இதனை தயாரித்து பயன்படுத்த முடியும்.

வெட்டிவேர் பயன்கள்

  • காமாலை, ரத்தசோகை, சிறுநீர்க் கட்டு, பித்த நோய்கள், தாது நஷ்டம், மயக்கம், வயிற்று மேகக் கட்டிகள், பைத்தியம், கழுத்து நோய், காய்ச்சல், தாகம், கண் நோய், தீயினால் ஏற்பட்ட புண் போன்ற நோய்களுக்கு நன்கு உலர்த்திப் பொடி செய்த வெட்டிவேர் பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து நீரில் அல்லது தேனில் குழைத்து கொடுத்த தீரும்.
  • மேலே கூறியது போல் வெட்டிவேரிலிருந்து தயாரிக்கப்பட்ட ஊறல் நீர் 30-60 மி.லி. வீதம் பருகிவர வயிற்று நோய்கள், காமாலை, காய்ச்சல், தாகம், சிறுநீர்க்கட்டு முதலியன நீங்கும்.
  • வெட்டிவேரினைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலத்தை தலையில் தேய்த்து வர வியர்வையை உண்டாக்குவதுடன் உற்சாகத்தையும் அளிக்கும். தலைமுடி உதிர்வைத் தடுக்கும்.
  • வெட்டிவேர் பொடியை நீர் விட்டு குழைத்து பெண்களின் மார்பகங்களில் கட்டி வர புண், சிலந்தி, கட்டிகள் போன்றவை தீரும்.
  • வெட்டிவேர் விசிறி, பைத்தியம், உடல் எரிச்சல், தாகம் முதலியவற்றை போக்கும்.
  • வெட்டிவேரின் தட்டியை கூரையாக மேய்வதாலும், கதவு ஓரங்களில், ஜன்னல் ஓரங்களிலும் பயன்படுத்துவதால் அறையின் வெப்பநிலை குறையும். வெயில் காலத்தில் இவ்வாறு பயன்படுத்த குளிர்ச்சியான காற்று கிடைப்பதுடன் உடல் சூடு, உடல் எரிச்சல் குறையும்.

(1 vote)