Ixora coccinea in tamil, rubiaceae, idli poo, vetchi

வெட்சி / இட்லி பூ – நம் மூலிகை அறிவோம்

Ixora coccinea; rubiaceae; idli poo, vetchi

வீடுதோறும் தமிழகத்தில் வளர்க்கப்படும் ஒரு பூ செடி மரம் இந்த வெட்சி. இதனை இட்லி பூ என்றும் அழைப்பதுண்டு. இதன் பூக்களின் காம்பு பகுதியில் தேன் இருக்க சிறு குழந்தைகள் அதனை விளையாட்டாக சாலைகளில் பறித்து பூக்களின் தேனை உறுஞ்சி உண்பது இன்றளவும் கிராமங்களில் காணப்படும் சுவாரசியமான விஷயம். இந்திய கிராமங்களில் மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளிலும் சதாரணமாக வளரும் தாவரம் இது.

Ixora coccinea in tamil, rubiaceae, idli poo, vetchi

சங்க இலக்கியங்கள் முதல் இந்திய மண்ணை ஆண்ட மன்னர்கள் வரை அனைவருக்கும் பரிச்சியமான மலர். அக்காலத்தில் போருக்கு செல்லும் மன்னன் வெட்சி – செந்நிற வெட்சி மலரை சூடிக்கொண்டு செல்வதுண்டு. பலவண்ணங்களில் இருக்கும் இந்த வெட்சி மலர்களில் செந்நிற வெட்சி தமிழ்க் கடவுள் முருகக்கடவுளுக்கும் உகந்த மலர். உடலின் நாடி நரம்புகளை சமன்படுத்த உதவும் மூலிகை.

இதன் இலைகள் நீள்வட்ட இரட்டை இலைகளாக இருக்கும். இதன் பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டது. உடல் திசுக்களை உறுதியாகவும் இறுகவும் செய்யும் ஆற்றல் கொண்ட மூலிகை. மேலும் குடலை பலப்படுத்தவும், உமிழ் நீரை பெருக்கவும், சிறுகுடலில் கழிவுகளை அகற்றவும் பயன்படுகிறது. களைப்பு, தாகம், புண், வயிற்றுப் போக்கு, சீதபேதி, உடல் சூடு, குமட்டல், பித்த வாந்தி, பசியின்மை, இரத்தக் கொதிப்பு, விக்கல், காய்ச்சல், வேட்டை ஆகியவற்றிற்கும் சிறந்தது.

காய்ச்சல் தீர

உடலில் ஏற்படும் காய்ச்சலுக்கு வெட்சி மலர்கள் நல்ல பலனை அளிக்கும். வெட்சி மலர்களை நீரில் கொதிக்கவைத்து ஒரு கப் அளவு அன்றாடம் மூன்று நாட்கள் பருகல் காய்ச்சல் நீங்கும்.

களைப்பு / தாகம் நீங்க

உடலில் ஏற்படும் தாகம், களைப்பு நீங்க வெட்சி மலர்களை நெயில் சிறுநாகப்பூ பொடி, வால்மிளகு பொடி சேர்த்து எடுக்க விரைவில் மறையும்.

புண் ஆற

வெட்சி வேர்ப்பட்டையை நன்கு நிழலில் உலர்த்தி பொடித்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து ஒரு துணியில் வைத்துக் புண்கள் உள்ள இடத்தில் வைத்துக் கட்ட விரைவில் புண் ஆறும்.

(1 vote)