Vernonia cinerea; சீதேவி செங்கழுநீர்
சீதேவி செங்கழுநீர் மூலிகை ஒரு ராஜ வசிய மூலிகை. உடலில் ஏற்படும் வீக்கங்கள், புண், சிறுநீரக தொந்தரவுகள், உடல் சூடு, வயிற்று வலி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்தது.
தமிழகத்தில் பரவலாக புதர்கள், ஏரிக்கரை, வயல்வெளிகள் என எங்கும் காணப்படும் ஒரு சிறந்த மூலிகை இந்த சீதேவி செங்கழுநீர். கிராமப்புறங்களில் இதனை நெய்ச்சட்டி கீரை அல்லது நெய் சட்டி பூண்டு என்பார்கள். பார்க்க பளிச்சென்று இருக்கும் இளஞ்சிவப்பு – ஊதா நிற பூக்களுடன் காணப்படும் ஒரு சிறு மூலிகை செடி இது. இலைகள் அழகாக இருக்கும். கிராமங்களில் கலவை கீரைகளுடன் சேர்த்து சமைப்பதுண்டு.
இந்த குருஞ் செடியின் சமூலமே சிறந்த மருந்தாக உள்ளது. சமூலத்தை சுத்தம் செய்து கசாயமாக அளவோடு எடுக்க பல தொந்தரவுகள் தீரும். கண் ஒளி, உடல் பிரகாசிக்கவும் பயன்படும். இரத்தத்தை சுத்திகரிக்கும் மூலிகை. கூந்தல் வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுக்கவும் இந்த மூலிகையின் எண்ணெய் உதவும்.
விசய மருந்து
வசிய மருந்துகள் செய்ய அதிகம் பயன்படும் மூலிகை. தெய்வ ஆற்றல் நிறைந்தது.
வெரிகோஸ் வெயின்
மாந்திரீகம், வசியம் மட்டுமல்லாமல் கால் முடிச்சு எனப்படும் வெரிகோஸ் வெயின் தொந்தரவிற்கு மிக சிறந்த மருந்தாகவும் செயல்படும். இதனை அரைத்து பற்றாக கால்களில் கால்முடிச்சுள்ள இடங்களில் போடா விரைவில் வலி நீங்கும், அதனைத் தொடர்ந்து இந்த தொந்தரவும் நீங்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும்.
சர்க்கரை வியாதிக்கு
வேப்பெண்ணையில் சேர்த்து 7 நாட்கள் வெயில் புடம் வைத்தால் கசப்பை நீக்கும். பிறகு வேப்பெண்ணையை இட்லி பொடியில் தொட்டு சாப்பிட்டால் சர்க்கரை வியாதி நீங்கும்.