புரத சத்துக்கள் மிகுந்த வித்து நிலக்கடலை என்னும் வேர்கடலை. உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பயிறு. வேர்கடலையை ஊறவைத்து, முளைக்கட்டி அன்றாடம் ஒரு கை அளவு உண்டுவர உடல் பலப்படும். புரதம், வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் உட்பட பல நுண்ணூட்ட சத்துக்களையும் கொண்டுள்ளது வேர்கடலை. நவராத்திரி திருவிழா நாட்களில் வேர்கடலை சுண்டல் தயாரித்து நைவேத்தியம் செய்து பிரசாதமாக பகிர்ந்தளிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்
- 2 கப் வேர்கடலை
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்து
- 2 வர மிளகாய்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- சிறிது கறிவேப்பிலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
- வேர்கடலையை காலையில் ஊறவைக்க வேண்டும்.
- ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வேர்கடலை ஊறியப்பின் நீரை வடித்து விட்டு ஓரிரு முறை களைந்து பின் கல் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வர மிளகாய், பெருங்காயம், வர மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த வேர்கடலையில் தேங்காய் துருவலுடன் சேர்க்கவும்.
- பின் நன்கு கிளற சுவையான சத்தான வேர்கடலை சுண்டல் தயார்.
வேர்கடலை சுண்டல்