வேம்பு புங்கன் கரைசல்

இரசாயன பூச்சிக்கொள்ளிகளால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.

இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது வேம்பு புங்கன் கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம். இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

செடிகளில் ஏற்படும் பூச்சி தாக்குதலை போக்கும் சிறந்த பூச்சி விரட்டியாக பாதுகாப்பை அளிக்கும் கரைசல் இந்த வேம்பு புங்கன் கரைசல்.

வேம்பு புங்கன் கரைசல் தயாரிக்க தேவையானவை

இரண்டரை ஏக்கர் நிலைத்திருக்கு இந்த அளவு தேவைப்படும்.

வேப்பெண்ணை – 1 லிட்டர்
புங்கன் எண்ணெய் – 1 லிட்டர்
நாட்டுப் பசு மாட்டுக் கோ மூத்திரம் (பழையது) – 10 லிட்டர்
காதி சோப்பு கரைசல் – அரை லிட்டர்

வேம்பு புங்கன் கரைசல் தயாரிக்கும் முறை

வேப்பெண்ணை, புங்கன் எண்ணெய், நாட்டுப் பசு மாட்டுக் மூத்திரம், காதி சோப்பு கரைசல் ஆகிய அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒருநாள் மூடி வைக்க வேண்டும். இவற்றை கலக்க வேம்பு குச்சி பயன்படுத்த அதிக பயன் கிடைக்கும்.

மறுநாள் அதை எடுத்து பயன்படுத்தலாம். 1 லிட்டர் கரைசலை 1௦ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

இந்த வேம்பு புங்கன் கரைசலில் காதி சோப்பு சேர்க்க காரணம்

தாவரங்களின் இலைகளின் மேல் ஓட்டும் தன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது.

வேம்பு புங்கன் கரைசலின் பயன்கள்

  • அனைத்து வகை பயிர்களுக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த பயன்படுதல்லாம்.
  • சிறந்த பூச்சி விரட்டியாக இருக்கக்கூடியது.
(1 vote)