பால் – நன்மைகள்

பல வகையான பால் நமக்கு அளிக்கும் நன்மைகள் பல

பசும் பால்

பசுவின் பாலினை பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாவரும் எந்த வித நோயினாலும் பாதிக்கப்பட்ட வரும் பருக அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும், உடல் பலமும் கிட்டும். அதிலும் வெண்மை, செம்மை, கருமை நிற பசுக்களுக்கும் தனித்தனியான குணங்கள் உண்டு. அதிலும் காரம் பசுவின் பால் பலவகையான நோய்களை தீர்க்கும் மாமருந்து. இரத்த சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் தரும். பசும்பாலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு பசும் பால் / பால் அறியாத பல தகவல்கள் என்ற பகுதியில் இணையவும். பசும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பசு நெய் உடலுக்கு பலத்தையும், உடல் கொழுப்பை குறைக்கவும் பயன்படுகிறது.

ஆட்டுப் பால்

ஆட்டுப்பால் பல விதங்களில் நமக்கு நன்மையையும் எளிதில் ஜீரணமாகும் தன்மையினையும் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்ற இந்த ஆட்டுப்பாலினை அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது.

யானை பால்

யானைப்பாலினை அருந்துவதால் வாத நோய்கள் நீங்கும்.

கழுதை பால்

அனைவரும் அருந்த கழுதைப்பால் ஏற்றதல்ல என்றாலும் சில நோய்களுக்கு மருந்தாகவும் இந்த பால் உள்ளது.

எருமை பால்

பலரால் அதிகம் உட்கொள்ளப்படும் எருமைப்பால் மந்தத்தைத் தரக்கூடியது. 

தேங்காய் பால்

எலும்புகளுக்கும், தசைகளுக்கும் வலு சேர்க்கும் தேங்காய்ப்பால் வளரும் குழந்தைகளுக்கு பல தாதுக்கள் கொண்ட சிறந்த பால்.

https://www.youtube.com/watch?v=TzO_zApX2tk

நிலக்கடலைப் பால்

நிலக்கடலைப் பால் பலப்பல தாதுக்களையும், வைட்டமின்களையும் உள்ளடக்கியது. சுவையான இந்த பாலினை பருக உடல் வலிமை பெறும்.

கேழ்வரகு பால்

கேழ்வரகு பாலைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை, காரணம் அதிக சுண்ணாம்பு சத்துக்களை கொண்ட சிறந்த பால் இது. பிறந்த குழந்தையின் முதல் திட உணவு இதுவே. எலும்புகளுக்கு பலம் சேர்க்கும் இந்த பாலினை அருந்திவர மூட்டுவலிகளும், எலும்பு தேய்மானமும் காணாமல் போகும்.

https://www.youtube.com/watch?v=JMlR62xzTC4

கம்பு பால்

குழந்தையின்மையை போக்கும் அற்புதமான பால் கம்பு பால். உடலின் உயிர் சக்தியை அதிகரிக்க உதவும்.

https://www.youtube.com/watch?v=1aVoZklRV4E