வாழைக் காய் சத்துள்ள காய்களில் ஒன்றாகும். வாழைக்காயில் உள்ள கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தும், இரும்புச் சத்தும் உடலுக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் உள்ளது. வாழைக்காயில் வைட்டமின் சத்துக்களும் குறிப்பாக வைட்டமின் சி சத்தும், தாது சத்துக்களும் உள்ளது.
பொதுவாக வாழைக் காயை எல்லோரும் பொரியல் செய்து சாப்பிடுவதுண்டு. பலரும் விரும்பி இந்த வாழை காயை பயன்படுத்தி வாழைக்காய் பஜ்ஜி செய்து பலகார வகையாகப் பயன்படுத்துவதும் உண்டு.
வாழைக்காய் சாப்பிட்டால் வாயு என்பார்கள், இது இளைஞர்களை ஒன்றும் செய்யாது. இதனால் ஏற்படும் வாயு பெரிய தொல்லை தராது. இருப்பினும் அளவோடு பயன்படுத்தினால் எந்த தொந்தரவும் ஏற்படாது.
வாழைக்காயின் பயன்கள்
- வாழைக்காய் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
- குடல் எரிச்சலுக்கும் சிறந்தது.
- ரத்தக் கடுப்பிற்கு நன்மை அளிக்கும்.
- குடலை சுத்திகரிக்கும் கூடிய ஒரு அற்புதமான காய் என்று கூட இந்த வாழைக்காயை சொல்லலாம்.
- உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள், கழிவுகள் போன்றவற்றை எளிமையாக இந்த வாழைக்காய் வெளியேற்றும்.
- குடல் சார்ந்த நோய்கள் குடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் இந்த வாழைக்காய் நல்ல ஒரு பலன் கொடுக்கும்.
- வாந்திபேதி, பித்தம், வயிற்றுப் பொருமல், அனல்காசம், வாய் குழறல் போன்றவற்றை நீக்கும் ஆற்றலும் வாழைக் காய்க்கு உண்டு.
எவ்வாறு வாழைக்காயை சமைத்து உண்பது
வாழைக்காய் வறுவல், வாழைக்காய் பொரியல், வாழைக்காய் பொடிமாஸ் என எந்த உணவாக வாழைக்காயை சமைத்தாலும் அதனுடன் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் கலந்து சமைத்து உணவுடன் சேர்த்து உண்டால் வாயுத் தொல்லை ஏற்படாது.
வாழைப்பிஞ்சில் மருத்துவ குணங்கள் வாழைக்காயை விட அதிகம். பொதுவாக நாட்டுரக வாழைக்காய்களை உணவில் பயன்படுத்துவது சிறந்தது.