வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்றாக இருக்கும் சிறுதானிய வகையில் 3000 வருடங்களுக்கு முன்பிருந்தே நம் தமிழகத்தில் உணவு தானியமாக இருந்த குறுந்தானியம் வரகு. வரகரிசிக்கு மேலும் பல சிறப்புகளும், பயன்களும் உள்ளது.
வரகு விதை / வரகு தானியம்
வரகு விதைகளில் எட்டு அடுக்கு தோல் இருக்கும். இந்த உமியை நீக்கியப்பிறகே வரகு அரிசியை சமைத்து உணவாக பயன்படுத்த முடியும்.
பட்டை தீட்டப்படாத வரகு அரிசி
உமியை மட்டும் நிக்கியப்பின் வரகு தானியத்தின் நிறம் சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதாவது வெந்தய நிறத்தில் இருக்கும்.
பட்டை தீட்டப்பட்ட வரகு அரிசி
வரகு தானியத்தின் உமி நீக்கி பின் அதன் மேல் இருக்கும் தவிடையும் நீக்கியப்பின் கிடைப்பது வெள்ளை நிற வரகு அரிசி. முழுவதுமாக பட்டை தீட்டினால் வெள்ளையாகவும், சிறிதளவு அல்லது பாதி அளவில் பட்டை தீட்டினால் அது சற்று பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
வரகரிசியில் பல பல உணவுகளை தயாரித்து உண்ண உடல் உபாதைகளும், நோய்களும் அகலும். வரகரிசி சோறு, வரகரிசியில் உப்புமா, வரகு அரிசி பொங்கல், வரகு அரிசி புட்டு, வரகு அரிசி இடியப்பம், வரகு அரிசி தோசை, வரகரிசி பிசரட், உடல் பருமனை குறைக்கும் வரகு அரிசி கஞ்சி, வரகரிசி எலுமிச்சை சாதம் என அரிசியில் தயாரிக்கும் பல உணவுகளை செய்து உண்ணலாம்.
வரகு அரிசி பயன்கள் மற்றும் நன்மைகள்
- சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு.
- சீரான இரத்த ஓட்டம், இருதய துடிப்பிற்கு ஏற்ற தானியமாகவும் இருக்கக்கூடியது இந்த வரகரிசி.
- நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
- மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.
- மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். சர்க்கரை அளவை குறைக்கிறது.
- கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு.
- உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது.
- சிறுநீரக நோய்கள், சிறுநீரக நச்சுக்கள் மற்றும் கழிவுகள் நீங்க வரகரிசி சிறந்த உணவாக உள்ளது.
- மலச் சிக்களுக்கு நிவாரணம் அளிக்கும் உணவாகவும் உள்ளது.
- உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கும் இந்த வரகரிசி நார்ச்சத்துக்கள் நிறைந்தது. வரகரிசி கஞ்சி உடல்பருமனுக்கு சிறந்த உணவு.