வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கல்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது.
பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று. சாதாரண சாதம் முதல் பொங்கல், இட்லி, கஞ்சி, பிரியாணி, முறுக்கு, தட்டை என விட விதமான பலகாரங்களை இந்த வரகரிசியில் தயாரிக்கலாம். வரகரிசி தேங்காய் சாதம் அல்லது வரகரிசி தேங்காய் பால் கஞ்சியை அவ்வப்போது உண்டு வர வயிறு சம்மந்தமான தொந்தரவுகள் நீங்கும்.
மேலும் வரகரிசியின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்துக்கொள்ள – வரகு அரிசி / Kodo Millet in Tamil.
தேவையான பொருட்கள்
- 1 கப் வரகரிசி
- 1/2 மூடி தேங்காய் துருவல்
- 2 வர மிளகாய்
- 1 ஸ்பூன் கடலை பருப்பு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்த பருப்பு
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்
- கறிவேப்பிலை
- பெருங்காயம்
- உப்பு
செய்முறை
- முதலில் கல் இருந்தால் சுத்தம் செய்துவிட்டு 20 நிமிடம் வரகரிசியை ஊறவைக்கவும்.
- ஒரு பங்கு வரகரிசிக்கு 2 பங்கு தண்ணீர் எடுத்து கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வரகரிசியை சேர்த்து சிறுதீயில் வேகவைத்தால் பத்து நிமிடத்தில் வரகரிசி சாதம் தயார்.
- பின் எண்ணெய்யை சுட வைத்து கடுகு, உளுந்த பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்தவுடன் வர மிளகாய் சேர்க்கவும்.
- அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும்.
- இத்துடன் வேகவைத்திருக்கும் வரகரிசி சாதம், உப்பு சேர்த்து கிளறவும்.
- சுவையான வரகரிசி தேங்காய் சாதம் தயார்.
- வரகரிசி தேங்காய் சாதத்தை அவ்வப்போது உண்டு வர வயிறு சம்மந்தமான தொந்தரவுகள் நீங்கும்.நன்கு மென்று எச்சிலுடன் உண்ண பல தொந்தரவுகள் நீங்கும். குறிப்பாக வயிறு குடல் சம்மந்தமான தொந்தரவுகள் நீங்கும்.
வரகு தேங்காய் சாதம்
வரகரிசி தேங்காய் சாதத்தை அவ்வப்போது உண்டு வர வயிறு சம்மந்தமான தொந்தரவுகள் நீங்கும்.நன்கு மென்று எச்சிலுடன் உண்ண பல தொந்தரவுகள் நீங்கும். குறிப்பாக வயிறு குடல் சம்மந்தமான தொந்தரவுகள் நீங்கும்.
பரிமாறும் அளவு : – 2
தேவையான பொருட்கள்
- 1 கப் வரகரிசி
- 1/2 மூடி தேங்காய் துருவல்
- 2 வர மிளகாய்
- 1 ஸ்பூன் கடலை பருப்பு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்த பருப்பு
- 2 ஸ்பூன் நல்ல எண்ணெய் அல்லதுதேங்காய் எண்ணெய்