வரகு சிறுதானிய தோசை

வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கல்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது. 

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று. பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சிறந்த ஆரோக்கியமான உணவாக இந்த வரகரிசி தோசை இருக்கும்.

மேலும் வரகரிசியின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்து கொள்ள – வரகு அரிசி / Kodo Millet in Tamil.

தேவையான பொருட்கள்

  • 3 கப் வரகு அரிசி
  • 1 கப் உளுந்து
  • உப்பு 

செய்முறை

  • முதலில் வரகரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • உளுந்தை 3௦ – 40 நிமிடம் ஊறவைக்கவும்.
  • ஊறிய வரகரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக மைய அரைத்து உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். 
  • இந்த மாவினை ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். 
  • பின் லேசான தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
  • சுவையான சத்தான வரகரிசி தோசை தயார்.
  • சாம்பார், தக்காளி சட்னி, புதினா சட்னியுடன் சுவையும், மணமும் நிறைந்த தோசை.